இயக்குநர் பா ரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை
Recommended Video
மதுரை: ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் இயக்குநர் பா ரஞ்சித்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த 5ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் தலித் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. இதனால் அவரது ஆட்சிக்காலம் இருண்ட காலம் என்று தரக்குறைவாக பா ரஞ்சித் விமர்சித்திருந்தார்.

கட்டிடக்கலையால் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த ராஜ ராஜ சோழனை வார்த்தைக்கு வார்த்தை அவன், இவன் என்றும் கடுமையாக பேசினார் ரஞ்சித். ஒரு கட்டத்தில் ராஜ ராஜ சோழன் ஒரு அயோக்கியன் என்றும் கூறினார்.
இவரது பேச்சுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ரஞ்சித் மீது போலீஸில் புகார் அளித்தனர். முக்குலத்தோர் புலிப்படை சார்பிலும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ராஜராஜ சோழனை விமர்சித்த இயக்குநர் பா. ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இயக்குநர் ரஞ்சித் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு இயக்குநர் ரஞ்சித் மனுத்தாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி ரஞ்சித் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு செய்யப்பட்டது.
அப்போது பா ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், இனி வரும் காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடாது என எச்சரித்தனர். அவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் கீழமை நீதிமன்றத்தை காவல் துறை அணுகி முன்ஜாமீனை ரத்து செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications