Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூல் லிப், புகையிலை பொருட்களை பள்ளிகளுக்கு அருகே விற்பனை செய்ய நாடு தழுவிய தடை.. ஐகோர்ட் கிளை ஆணை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: பள்ளி வளாகங்கள் அருகே கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும். குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக மத்திய அரசின் சட்டத்தில் கடுமையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்தில் அரசு வழக்கறிஞர்களை அழைத்த ஐகோர்ட் கிளை நீதிபதி, தமிழகத்தில் "கூல் லிப்" எனும் போதைப் பொருளை விற்பனை செய்த வழக்கில் ஜாமின் கோரி பல வழக்குகள் வருகின்றன. குறிப்பாக பள்ளி மாணவர்கள் இந்த போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பது தெரிய வருகிறது. தமிழகத்தில் "கூல் லிப்" உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது. அத்தகைய பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

tobacco cool lip high court

மேலும், சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க இது போன்ற போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததே காரணம். இளம் தலைமுறையினர் சிந்திக்கும் திறன் முற்றிலுமாக மறைந்து வருகிறது. நமது குழந்தைகளை நாம் எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம்? "கூல் லிப்" போன்ற போதை பொருள் விற்பனை செய்தால் கைது செய்கிறோம். அவர்கள் ஜாமினில் வெளிவந்து விடுகின்றனர். 15 நாட்களுக்கு கடை மூடப்படுகிறது. பின்னர் வழக்கம் போல் செயல்பட தொடங்கி விடுகிறது.

போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு குழந்தை உளவியல் அறிந்து கவுன்சிலிங் வழங்குவது, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது போன்ற எவ்விதமான நடவடிக்கைகளை எடுக்கலாம்? என முடிவு செய்ய வேண்டும். மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படக்கூடாது.
தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் "கூல் லிப்" எனும் போதைப்பொருட்களை பயன்படுத்துவோர் இருப்பதாகவே தெரிகிறது. ஆகவே "கூல் லிப்" உள்ளிட்ட போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

மேலும், கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை தாமாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து, அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், பள்ளி வளாகங்கள் அருகே கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும். குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக மத்திய அரசின் சட்டத்தில் கடுமையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

குட்கா, 'கூல் லிப்' உள்ளிட்ட புகையிலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு மேலும் பல கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் புகையிலை பொருட்களுக்கு அடிமையாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; எனவே, முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+