Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கீழடி அருங்காட்சிகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்: அதிநவீன வசதிகள் என்னென்ன பாருங்க!

தமிழர்களின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக கீழடி அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை : சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். கீழடியில் தமிழ்நாடு அரசு சார்பில், 2 ஏக்கர் நிலத்தில் 18. 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கள அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரையை மையமாக வைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் நடந்து முடிந்த அரசு திட்டங்களை ஆய்வு செய்தார்

இதற்காக மதுரை வரும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை கீழடியில் சுமார் 18 கோடி ரூபாய் செலவில் வண்ண வண்ண ஒளி அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.

கீழடி அருங்காட்சியகம்

கீழடி அருங்காட்சியகம்

கீழடியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் மூலம் கி.மு.6ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்று நகர நாகரிகத்துடன் தமிழர்கள் வாழ்ந்திருப்பதை உலகுக்குக் பறைசாற்றும் வகையில் ரூ.18.8 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். இந்த கீழடி அருங்காட்சியகத்தில் பல்வேறு காட்சிக் கூடங்கள், அதிநவீன வசதிகளுடன் கூடிய அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 வைகை நதி நாகரிகம்

வைகை நதி நாகரிகம்

தமிழ்நாட்டின் நதிகளில் மிகவும் பழமையானது வைகை. இதன் நதிக் கரைகளில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதில் வைகை ஆற்றின் இருபுறமும் 293 இடங்களில் தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் இருந்த 100 இடங்கள் அகழாய்வு மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டன. முதல்கட்டமாக சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் மத்திய தொல்லியல் துறையினர் அகழாய்வைத் தொடங்கினர்.

தொல்லியல் ஆய்வு

தொல்லியல் ஆய்வு

கடந்த 2014 முதல் 2017-ஆம் ஆண்டு வரை கீழடியில் மத்திய தொல்லியல் துறை 3 கட்டங்களாக மேற்கொண்ட அகழாய்வில் 7,818 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டு அங்கு சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டன. அதன்பின் தமிழ்நாடு தொல்லியல் துறை 4, 5-ம் கட்ட அகழாய்வுகளில் ஈடுபட்டது. இதில் 6,800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்களும், பழந்தமிழ ரின் கட்டுமானப் பகுதிகளும் கண்டறியப்பட்டன. இதன்மூலம் கீழடியில் 2,600 ஆண்டுகள் பழமையான நகர நாகரிகம் நிலவியது தெரியவந்தது. மேலும், கங்கை சமவெளியின் நகரமயமாக்கலுக்கு சமகாலமானது கீழடி நாகரிகம் என்பதும் உறுதிசெய்யப்பட்டது.

‘தமிழி’ எழுத்துகள்

‘தமிழி’ எழுத்துகள்

தொடர்ந்து, கீழடி மற்றும் அதைச் சுற்றிய மணலூர், அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் 6-ம் கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு பல்வேறு வடிவிலான செங்கல் கட்டுமானங்கள், மூடிய வடிகால், சுருள் வடிவ சுடுமண் குழாய், உறை கிணறு, பானை ஓடுகள், கால்நடைகளின் எலும்புகள், இரும்பு பொருட்கள், வெள்ளி காசுகள், எடைக்கற்கள், சக்கரம், முத்திரை உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுதவிர கீழடி அகழாய்வில் 1,500-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேலான தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்தன. இவை, 6-ம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் வாழ்ந்ததற்கான முக்கிய சான்றுகளாக கருதப்படுகின்றன.

அருங்காட்சியகம்

அருங்காட்சியகம்

இதுதவிர ரோம் நாடு, குஜராத், கங்கை சமவெளி உட்பட பல்வேறு பகுதிகளுடன் வாணிபத் தொடர்பு இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. பழங்கால தமிழ்ச் சமூகம் கிமு 6-ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றும், நகர நாகரிகத்துடன் வாழ்ந்திருப்பதும் தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து வைகை ஆற்று நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் கீழடியில் தமிழ்நாடு அரசின் சார்பில் கள அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மதுரையும் கீழடியும்

மதுரையும் கீழடியும்

அதன்படி 2 ஏக்கர் பரப்பில் ரூ.18.8 கோடி செலவில் தமிழ்நாடு மரபுசார் கட்டிடக்கலையின்படி கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களைக் காட்சிப்படுத்தும் வகையில் 6 காட்சிக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 'மதுரையும் கீழடியும்' என்ற முதல் காட்சிக் கூடத்தில் பழங் காலம் தொடங்கி வரலாற்றின் தொடக்க காலம் வரை வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையிலான ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தொல்லியல் தளங்கள், மதுரையின் பழமை, கீழடி அகழாய்வு கடந்து வந்த பாதை உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் 15 நிமிட ஒலி ஒளிக் காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

காட்சிக்கூடங்கள்

காட்சிக்கூடங்கள்

இரண்டாம் காட்சிக் கூடத்தில், வைகைக்கரையில் வாழ்ந்த மக்களின் வேளாண்மை, நீர் மேலாண்மை குறித்து விளக்கும் தொல்பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மூன்றாம் காட்சிக் கூடத்தில் தமிழ் சமூகம் எழுத்தறிவு பெற்று வாழ்ந்ததற்கான பானை ஓடுகள், மண்பாண்ட தொழில் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், நான்காம் கூடத்தில் இரும்பு, நெசவு, கைவினைத் தொழில்கள் நடந்ததற்கான சான்றுகளும், ஐந்தாம் காட்சிக் கூடத்தில் கடல் வணிகம் செய்த சான்றுகளும் வைக்கப்பட்டுள்ளன. ஆறாம் கூடத்தில் பொழுதுபோக்கு, வாழ்வியல் சார்ந்த கலைகள் மற்றும் எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.

விர்ச்சுவல்

விர்ச்சுவல்

இதுதவிர அருங்காட்சியகத்தில் வைகை ஆற்றங்கரையில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தொடுதிரையில் அறிந்து கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண்மை, இரும்புத் தொழில், நெசவு, மணிகள் தயாரித்தல், கடல்வழி வணிகம், எழுத்தறிவு போன்ற மேம்பட்ட தமிழ் சமூகம் குறித்து விளக்கும் 2 நிமிட அனிமேஷன் வீடியோ காட்சிப்படுத்தப்பட உள்ளது. மேலும், கீழடி அகழாய்வுப் பணிகள், தோற்றம், செயல்பாடுகள் ஆகியவற்றை தத்ரூபமாக அறியும் வகையில் சிறப்பு மெய்நிகர் காட்சிக்கூடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டச் ஸ்கிரீனில் தமிழர் விளையாட்டுகள்

டச் ஸ்கிரீனில் தமிழர் விளையாட்டுகள்

குழந்தைகளும் மாணவர்களும் தமிழர் விளையாட்டுகளை தொடுதிரையில் விளையாடும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான தொல்பொருட்களை முப்பரிமாண வடிவில் காணும் வசதியும் உள்ளது. பொதுமக்கள் தங்கள் பெயரை தொடுதிரையில் எழுதினால் தமிழி எழுத்தில் தங்களது பெயரைக் காண்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+