கதறி அழுத மாணவி!கவலைப்படாதேம்மா!கார் அனுப்பி மாணவியை வாழ்த்திய முதல்வர்! மதுரையில் நெகிழ்ச்சி!
மதுரை: உயர் கல்வி படிக்க உதவி கேட்ட பெண்ணுக்கு உதவி செய்ததுடன் மதுரையில் அந்த பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் வரவழைத்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்திய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மதுரை மாவட்டம் திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்தவர் 12 ஆம் வகுப்பு மாணவி ஷோபனா. இவர் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் பண வசதியில்லாமல் ஏழ்மை நிலையில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கடிதம் எழுதியிருந்தார்.
அந்த மாணவியின் கடிதத்தை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், அவர் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் பிபிஏ படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

கோரிக்கை
இதனால் மகிழ்ச்சி அடைந்த ஷோபனா, தனது கோரிக்கையை ஏற்று தனது வாழ்வில் கல்வி எனும் தீபம் ஏற்றி வைத்த முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசையாக உள்ளது. ஆனால் மதுரையிலிருந்து சென்னைக்கு வருவதற்கான பண வசதி தன்னிடம் இல்லை என மீண்டும் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

கிராமம்
இந்த கடிதமும் முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இந்த நிலையில் தேவர் ஜெயந்தி, பல்வேறு அரசு திட்ட பணிகளின் ஆய்வுகள், கொரோனா தடுப்பூசி முகாம் ஆய்வு உள்ளிட்டவைகளுக்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு மதுரை வந்திருந்தார். அப்போது மதுரை விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த ஸ்டாலின், திருவேடகம் கிராமத்திற்கு அரசு வாகனத்தை அனுப்பினார்.

கார் அனுப்பிய ஸ்டாலின்
அப்போது முதல்வர் ஸ்டாலின் அனுப்பியதாக சொன்னவுடன் ஷோபனா, அவரது பெற்றோர், சகோதரி ஆகியோர் அந்த வாகனத்தில் ஏறிச் சென்றனர். மதுரை விருந்தினர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலினை பார்த்தவுடன் உணர்ச்சி பொங்கி மாணவி அழுதார். அவரை தேற்றிய முதல்வர் ஸ்டாலின், "கவலைப்படாதீங்க ஒன்னும் இல்லம்மா. நல்லா படிங்க. எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் அரசிடம் கேளுங்க.

எளிய மக்கள்
ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காகத்தான் இந்த அரசு அமைந்துள்ளது என்ற ஸ்டாலின், ஷோபனாவின் தங்கையிடம் என்ன படிக்கிறாய் என கேட்டு நன்றாக படிக்குமாறு தோள்களில் தட்டி கொடுத்தார். இதையடுத்து ஷோபனா படிப்பதற்கு தேவையான புத்தகப்பை, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், நிதியுதவி ஆகியவற்றை வழங்கினார். இதனால் அந்த குடும்பமே நெகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

இன்ப அதிர்ச்சி
உயர்கல்வி படிக்க உதவியுடன் தன்னை சந்திக்க வரமுடியாவிட்டாலும் வாகனத்தை அனுப்பி தன்னை சந்திக்க வைத்த முதல்வரின் தாயுள்ளத்தை எண்ணி ஷோபனா வியப்படைந்ததும் இன்பம் கலந்த அதிர்ச்சியில் இருந்தார்.












Click it and Unblock the Notifications