கலைஞர் நூற்றாண்டு நூலகம்.. ரூ.206 கோடியில் 8 தளங்களுடன் பிரம்மாண்டம்.. முதல்வர் ஸ்டாலின் திறப்பு
மதுரை: ரூ.206 கோடி மதிப்பில் மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நூலகத்தின் முன்பாக நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
காமராஜர் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் உலகிலேயே பெரிய நூலகங்களுடன் போட்டி போடும் அளவுக்கு மதுரையில் கலைஞர் பெயரில் ஒரு நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகம் ரூ.206 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் கட்டப்பட்டது.

மதுரையில் இன்று மாலை 5 மணிக்கு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்க முதல்வர் பகல் 11.30 மணிக்கு விமானத்தில் மதுரைக்கு புறப்பட்டார்.
மதுரை விமான நிலையத்திற்கு வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் அவர் ஓய்வெடுத்தார்.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மதுரையில் உலகத்தரம் வாய்ந்த நிறுவனமான பின்னக்கிள் இன்ஃபோடெக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்
மாலை 5 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அதன்பின் போலீஸ் ரிசர்வ் லைன் மைதானத்தில், கலைஞர் நூலக திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவர் அரசு மருத்துவமனையையும் திறந்து வைக்கிறார்.
முதல்வர் வருகைக்காக மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நத்தம் சாலை- ரவுண்டானா சந்திப்பு- ஆத்திக்குளம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கப்பலூரிலிருந்து மதுரை நோக்கி வரும் கனரக வாகனங்கள் அருப்புக்கோட்டை - தூத்துக்குடி செல்லும் சாலையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் , எ.வ.வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications