கோயம்பேட்டில் ரோகிணி தியேட்டரில் யாருன்னு பாருங்க! சென்னையில் ஜப்பான் ரசிகர்களால் களைகட்டிய ஜனநாயகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம், இன்று ரிலீஸாகி உள்ளது.. முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன்பாக விஜய் நடித்துள்ள கடைசி படம் இது என்பதால், இதன் ரிலீஸை வெறும் பட வெளியீடாக மட்டும் ரசிகர்கள் இதை பார்க்கவில்லை.. மாறாக, விஜய்யின் நீண்டகால திரைப்பயணத்திற்கான எமோஷனலான பிரியாவிடை திருவிழாவாகவே ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள். அந்தவகையில் ஒருசில இடங்களில் நடந்த சூப்பர் சம்பவங்களை இங்கே பார்ப்போம்.

இன்று ஜனநாயகன் படம் வெளியாகி உள்ளது.. இதனால் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை கண்டு களித்தனர். பலர் தங்களது கார்கள் மற்றும் பைக்குகளில் ஜனநாயகன் ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு பேரணி போல கிளம்பி தியேட்டர்களுக்கு வந்தனர்.

Jana Nayagan Japanese Fans

கோயம்பேடு ரோகிணி தியேட்டர்

அந்தவகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டருக்கு , ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விஜய்யின் தீவிர ரசிகர்கள் குழு ஒன்று வந்து, பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஜப்பான் ரசிகர்கள் தமிழ் ரசிகர்களுடன் இணைந்து தியேட்டர் முன் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள்..

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள சங்கீதா தியேட்டரிலும், ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.. தியேட்டரின் முன்பாக பொங்கல் ரசிகர்கள் வைத்து, ஜமாப் இசை மற்றும் மேளதாளங்களுடன் உற்சாகமாகக் கொண்டாடினார்கள்.

இந்த படம் ஏற்கனவே ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவிருந்து சென்சார் சிக்கல்களால் தாமதமானது. அதனால் இந்த படம் எப்போது தியேட்டரில் வெளியாகிறதோ, அந்த நாளில்தான் தங்களுக்கு பொங்கல், தீபாவளி பண்டிகை என்று சொல்லியிருந்தனர்.. அதனாலேயே இன்று ரசிகர்கள் சங்கீதா தியேட்டரில் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்..

ஓபனிங் சீன் & வளர்ப்பு மகள் பாச காட்சிகள்

ஜனநாயகன் படம் முதல் ஷோ முடிந்ததுமே, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.. குறிப்பாக படத்தின் ஓபனிங்கில் வரும் சிறை கலவரம், ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ஹீரோவுக்கும், அவரது வளர்ப்பு மகளுக்கும் இடையேயான காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன.

"பிளாஷ்பேக் பகுதியில் போலீஸ் ஆபீஸராக வரும் விஜய் , வில்லன்களாக நடித்துள்ள பிரகாஷ் ராஜ், பாபி டியோல் ஆகியோரின் கேரக்டர்கள் குறித்தும் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை ஷேர் செய்து வருகிறார்கள். அதிலும் கடைசி அரை மணி நேரத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் மற்றும் மாஸான காட்சியமைப்புகள் குறித்து ரசிகர்கள் சிலாகித்து பேசி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி தியேட்டரில் கண்காட்சி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலூகா அலுவலக சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலாஜி தியேட்டர் வளாகம் இன்று அதிகாலை முதலே திருவிழா போலக் காட்சியளித்தது. தியேட்டரின் வாசலில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் கட்-அவுட்டுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து பாலாபிஷேகம் செய்தனர். அதிநவீன சவுண்டு சிஸ்டமுடன் கூடிய டிஜே இசை, பாரம்பரிய தாரை தப்பட்டை முழக்கங்களுடன் ரசிகர்கள் ஆடிப்பாடித் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

அதுமட்டுமல்ல, விஜய்யின் ஆரம்பகால திரைப்படங்கள் முதல் இப்போதைய ஜனநாயகன் வரை, அவரது 30 ஆண்டுகால சினிமா பயணத்தைப் பிரதிபலிக்கும் அரிய போட்டோக்கள் அடங்கிய சிறப்பு புகைப்பட கண்காட்சியும் அங்கு அமைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்ததுமே ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியடைந்துவிட்டனர்.

இப்படி தமிழகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் படத்தை கொண்டாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+