போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்.. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்!
மதுரை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மதுரை மேலூர் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவுத் தேர்வை 23 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியான நிலையில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது. நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், கட்சிகளின் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழக சட்டப் பேரவையில் கடந்த 28 ஆம் தேதி அன்று, நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய மாணவர் சங்கத்தினரின் ஒருங்கிணைப்பில் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், மதுரை மாவட்டம் மேலூர் அரசு கலை கல்லூரியில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வளாகத்தில் அமர்ந்து, நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தேசிய தேர்வு முகமையை கலைக்கக் கோரியும் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் SFI தென்சென்னை மாவட்டத் தலைவர் ஆனந்த்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, திருவாரூர் மன்னார்குடி, புதுக்கோட்டையிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications