மதுரை புத்தக திருவிழாவில் விஜய் டிவி ராமர் பெயர் நீக்கம்! பேனரில் போட்டோவும் மறைப்பு! ஏன் என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை புத்தகத் திருவிழாவில் பங்கேற்போரின் பட்டியலில் நகைச்சுவை நடிகர் ராமரின் பெயரும் அவருடைய புகைப்படமும் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் சர்ச்சை எழுந்துள்ளன.

மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 6 ஆம் தேதி புத்தகத் திருவிழா தொடங்கியது. வரும் 16 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் இந்த புத்தகக் கண்காட்சியில் நிகழ்ச்சி அழைப்பாளர்கள் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது. புத்தகத் திருவிழாவிற்கு பேச்சாளர்களும், சிறப்பு விருந்தினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

ramar madurai book fair

முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், மதுரை எம்பி சு. வெங்கடேசன், பேச்சாளர்கள் ஞானசம்பந்தன், ஐ லியோனி, பர்வீன் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர். அந்த வரிசையில் தனியார் தொலைகாட்சியைச் சார்ந்த நகைச்சுவை நடிகர் ராமரும் அழைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், "ராமர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். நகைச்சுவை என்ற தனித்திறமையால் அவரை அழைத்திருக்கிறோம். அவருக்கு மட்டும் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தரவில்லை. பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசியதற்கு பின் சிறிது நேரத்திற்கு அவர் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் புத்தகத் திருவிழா புத்தக வாசிப்பாளர்களின், புத்தக பிரியர்களின் நிகழ்வாக இருக்கக் கூடிய நிலையில், புத்தகங்கள் தொடர்பான நபர்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற கருத்து எழுந்திருக்கிறது. ராமர் பங்கேற்பது குறித்து எதிர்ப்பும் ஆதரவும் இருந்து வந்தது.

இந்த நிலையில் புத்தகத் திருவிழாவில் பங்கேற்போர் பட்டியலில் இருந்த ராமரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அது போல் அவருடைய புகைப்படமும் வேறு ஒரு பேப்பர் போட்டு மறைக்கப்பட்டுள்ளது. எனவே ராமர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

இந்த புத்தக திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட ஸ்டால்களின், அரசியல், பொருளாதாரம், கவிதை, தமிழ் இலக்கியம், ஒரு வயதில் இருந்து 5 வயது குழந்தைகளுக்கான தனித்துவமான புத்தகங்கள், சுதந்திர தியாகிகளின் புத்தகங்கள், சினிமா துறை சார்ந்த புத்தகங்கள், ஆங்கில புத்தகங்கள், சிறுகதைகள், ரமணிச்சந்திரனின், கல்கி மற்றும் சாணக்கியன் நாவல்கள், ஆன்மீகம் சார்ந்த புத்தகங்கள், போட்டி தேர்வு புத்தகங்கள் என லட்சக்கணக்கான புத்தகங்கள் குறைந்தபட்சமாக 10 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.

காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழா, செப்டம்பர் 6-ம் தேதியில் இருந்து 16ஆம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. குறிப்பாக மாலை நேரத்தில் அதாவது 6 மணியிலிருந்து 9 மணி வரைக்கும், புத்தக பிரியர்களுக்காகவே, பிடித்தமான புத்தக எழுத்தாளர்களின் நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்க நாளான 6-ஆம் தேதி, தமுக்கம் மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பக்திப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட நிலையில், திடீரென மேடைக்கு கீழே அமர்ந்திருந்த மாணவிகள் சாமியாட ஆரம்பித்தனர். நேரம் செல்ல செல்ல பலரும் நாற்காலிகளை தள்ளிவிட்டு சாமியாடினர். சில மாணவிகள் மயங்கி விழுந்த நிலையில், அவர்களுக்கு அருகிலிருந்த பொதுமக்கள் தண்ணீர் கொடுத்து அமர வைத்தனர். இதையடுத்து கலைநிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ராமரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+