வரும் தேர்தல் அனைவருக்கும் விடை சொல்லும்.. அசராத பிரேமலதா விஜயகாந்த்!
Recommended Video
மதுரை: வரவிருக்கும் தேர்தல் அனைவருக்கும் விடை சொல்லும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் தேமுதிக, பாஜக அதிமுக பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் அந்த கூட்டணி படுதோல்வியடைந்து.
ஒரு காலத்தில் திமுகவை வீழ்த்தி தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக வலம் வந்த தேமுதிக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அக்கட்சியின் வாக்கு வங்கியும் கணிசமாக குறைந்துள்ளது.

கூட்டணி தொடரும்
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, முன்பு கூறியது போன்று உள்ளாட்சித் தேர்தலின் போதும் எங்களது கூட்டணி தொடரும்.

இப்போது கேட்க இயலாது
எந்த இடத்தில் யார் போட்டியிடுவார் என்பது உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தேமுதிகவில் உள்ளவர்களுக்கு ராஜ்யசபாவில் இடம் வேண்டும் என்று தேர்தலுக்கு முன்னதாக ஏற்றுக்கொள்ளாததால் எங்களால் தற்போது இடம் கேட்க இயலாது.

பழி போடுவது தவறு
தோல்வியுற்ற பொழுது பல்வேறு விமர்சனங்கள் எழக்கூடும். இருந்த போதிலும் வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் சமநிலையை தொடர்வது தான் நிஜமான வெற்றி.
தொடர்ந்து ஒரு தரப்பினர் மீது மட்டும் தோல்வி குறித்து பழி போடுவது தவறு.

திமுக பூஜ்ஜியம் பெற்றது
மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழும் என்று கூறிவந்தனர். எந்தவித மாற்றமும் நிகழவில்லை கடந்த முறை திமுக பூஜ்ஜியம் இடங்களைப் பெற்றது. தற்போது எங்கள் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

வாக்கு வங்கி குறையவில்லை
எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலிலும் மற்ற தேர்தலிலும் நிச்சயம் மக்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள்.
தேர்தலில் வாக்கு வங்கிகள் எதுவும் குறையவில்லை. 40 தொகுதியில் போட்டியிடுவதையும், 4 தொகுதிகளில் போட்டியிட்டதையும் ஒப்பிடகூடாது.
வரவிருக்கும் தேர்தல் அனைவருக்கும் விடை சொல்லும். இவ்வாறு பிரேம லதா விஜயகாந்த் பேசினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications