தென் தமிழகத்தை வதைக்கும் கொரோனா- மதுரை 341; தூத்துக்குடி 269; விருதுநகர் 175 பேருக்கு பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: தென் தமிழக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மதுரையில் இன்று ஒரே நாளில் 341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து மதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000-த்தை தாண்டியது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய வட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வந்தது. இதனையடுத்து இந்த 4 மாவட்டங்களில் தீவிர முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.

இதனால் இம்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. சென்னை மாவட்டத்தில் இன்று 1291 பேருக்கும் செங்கல்பட்டில் 186 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 163; திருவள்ளூரில் 278 பேருக்கும் கொரோனா உறுதியானது.

7,000-த்தை தாண்டிய பாதிப்பு

7,000-த்தை தாண்டிய பாதிப்பு

தற்போது மதுரை உள்ளிட்ட தென் தமிழகத்திலும் வட மாவட்டங்களைப் போலவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மதுரையில் இன்று 341 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மதுரையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7331 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி, திண்டுக்கல்லில் பாதிப்பு

தூத்துக்குடி, திண்டுக்கல்லில் பாதிப்பு

மதுரையை தொடர்ந்து தூத்துக்குடியில் 269 பேருக்கு கொரோனா உறுதியானது. திண்டுக்கல்லில் இன்று 2-வது நாளாக கொரோனா பாதிப்பு 100ஐ தாண்டியது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

காஞ்சி, கன்னியாகுமரி

காஞ்சி, கன்னியாகுமரி

தமிழக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம்: அரியலூர் 43; செங்கல்பட்டு 186 ; சென்னை- 1291; கோவை- 104 ;கடலூர்- 59 ;தருமபுரி- 9 ;திண்டுக்கல் - 119 ;ஈரோடு -9 ; கள்ளக்குறிச்சி- 75 ; காஞ்சிபுரம் - 163 ; கன்னியாகுமரி - 135 ; கரூர்- 3 ; கிருஷ்ணகிரி- 29

Recommended Video

    Health Tips நல்ல தூக்கம் வர.. மாதவிடாய் கோளாறுகள் சரியா.. டாக்டர் தீபா அட்வைஸ்
    சிவகங்கை, நெல்லை நிலவரம்

    சிவகங்கை, நெல்லை நிலவரம்

    மதுரை- 341 ; நாகப்பட்டினம் - 7 ; நாமக்கல் -12 ; நீலகிரி - 25 ; பெரம்பலூர்- 3 ; புதுக்கோட்டை- 49 ; ராமநாதபுரம்- 119 ; ராணிப்பேட்டை- 64 ; சேலம் -20 ; சிவகங்கை - 100 ; தென்காசி -17 ; தஞ்சாவூர்- 77 ; தேனி- 59 ; திருப்பத்தூர்- 20; திருவள்ளூர்- 278 ; திருவண்ணாமலை- 124 ; திருவாரூர் -9 ; தூத்துக்குடி- 269; நெல்லை- 164 ;திருப்பூர்- 25 ; திருச்சி -99; வேலூர்- 97 ; விழுப்புரம்- 91; விருதுநகர்- 175

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+