ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை என்ன பண்ணி வச்சிருக்கீங்க? ரயில்வே துறையிடம் விளக்கம் கேட்ட சு.வெங்கடேசன்
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாம்பன் பாலத்தை மறு சீரமைக்கும் விதமாக புதிய பாலம் கட்டப்பட்டது. ஆனால் இதன் தரம் கேள்விக்குறியாக இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருப்பதாகவும், பாலத்தின் உறுதி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ரயில்வே துறைக்கு சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
தென்னியாவின் பொறியியல் அதிசயமாக பாம்பன் பாலம் இருந்து வந்தது. ஆனால் இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதால் தற்போது சேதமடைந்து இருந்தது. எனவே, மாற்று பாலத்தை கட்டும் பணியில் ரயில்வே துறை தீவிரமாக இறங்கியது. பாலம் ஒருவழியாக கட்டி முடிக்கப்பட்டு சோதனை ரயிலும் இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ரயில்வே துறை அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்திருந்தனர். இந்த ஆய்வில் பாலத்தின் தரம் குறித்து கேள்விகள் எழுந்திருக்கின்றன. இதனை சுட்டிக்காட்டி, ரயில்வே துறையிடம் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது x தளத்தில், "பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாம்பன் பாலம். இரயில்வே துறையின் ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பான RDSO வின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன? இத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி குறித்து ரயில்வே அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் .
பாம்பன் பாலம் 1914 இல் கட்டப்பட்டது. அது அன்றையக் காலத்தில் ஒரு பொறியியல் அதிசயமாகும். அதற்கு பதிலாக புதிய பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்தில் நடந்துள்ள மோசடியை இரயில்வே பாதுகாப்பு ஆணையரே கடுமையாக விமர்சித்துள்ளார்.
உதாரணமாக தூக்குப்பாலப் பகுதி ரயில்வேயில் ஆராய்ச்சி வடிவம் மற்றும் தர நிர்ணய அமைப்பின் (RDSO) எந்தவிதமான ஒப்புதலும் இல்லாமல் வேறு வடிவமைப்பு விதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ரயில்வே வாரியத்தின் ஆதரவோடு ஆர் டி எஸ் ஓ தன் கடமையை கைவிட்டுள்ளது வேதனையாகும் என்று அவர் சுட்டிக் காட்டி உள்ளார். இப்படிப்பட்ட முக்கியமான பாலம் கட்ட தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பை (RDSO) இதில் ஈடுபடுத்த வேண்டாம் என்று ரயில்வே வாரியம் முடிவெடுத்தக் காரணத்தால் தொழில்நுட்பக் குழுவை அமைக்க வில்லை . ரயில்வே வாரியம் தனது சொந்த நடைமுறை விதிகளை மீறுவது மிகவும் ஆபத்தானது துரதிஷ்டமானது என்று ஆணையர் கண்டித்துள்ளார்.
அது மட்டுமல்ல பாலத்திற்கான இரும்பு படிமங்கள் கூட ஆர் டி எஸ் ஓ வை கலந்தாலோசிக்காமல் கட்டப்பட்டுள்ளது. இதுவும் மிகவும் மோசமானது. எல்லாம் முடிந்த பிறகு தெற்கு ரயில்வே தலைமை பொறியியல் அதிகாரியின் ஒப்புதலை ஆணையம் சுட்டிக் காட்டிய பின் 18. 10. 24 இல் பெற்றுள்ளனர்.
இந்தியாவின் பெருமைமிகு அமைப்பான இந்திய ரயில்வே வாரியம் தமிழகத்தின் பாரம்பரியமிக்க வழித்தடத்தில் பாம்பன் பாலத்தை பாதுகாப்பு விதிகளை புறக்கணித்துக் கட்டியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
பாம்பன் பாலம் கடல்நீரின் ஈரப்பதத்திற்கும், காற்றின் தாக்கத்திற்கும், ரயிலின் வேகத்திற்கும் ஈடுகொடுக்கும் வகையில் கட்டப்பட வேண்டிய கட்டுமான தொழில்நுட்பமாகும். இதை அலட்சியப்படுத்துவது அந்த வழித்தடத்தில் தினந்தோறும் பயணிக்க உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை அலட்சியப்படுத்துவதாகும். ரயில்வே அமைச்சகம் எப்படி இதற்கு அனுமதியளித்தது என்பதை அமைச்சர் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்" என வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications