பெண்ணுக்கு பெண் இப்படியா? விடுதி மாணவிகள் வாழ்க்கையில் விளையாடிய ஜனனி! களத்தில் இறங்கிய சைபர் கிரைம்

Subscribe to Oneindia Tamil

மதுரை : மதுரையில் தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி இருந்த பெண் ஒருவர் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்து மருத்துவருக்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அழிக்கப்பட்ட ஆதாரங்களை மீண்டும் சேகரிக்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் . இவர் எம்பிபிஎஸ் படித்து முடித்துவுிட்டு கமுதியில் முஸ்லீம் பஜாரில் கிளினிக் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 ஆண்டாகி விட்டது.

இவரது கிளினிக் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் ஜனனி. இவர் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் பி.எட்., படித்து வருகிறார். இவருக்கும், கமுதியைச் சேர்ந்த டாக்டர் ஆசிக் என்பவருக்கும் பல ஆண்டாக நட்பு இருந்துள்ளது.

ரகசிய வீடியோக்கள்

ரகசிய வீடியோக்கள்

இதற்கிடையில் பெண்கள் விடுதியில் தங்கியிருந்து படித்துவரும் ஜனனி, உடன் தங்கியுள்ள மற்ற பெண்களின் குளியல் அறை காட்சிகள், உடைகள் மாற்றும் காட்சிகளை புகைப்படம் மற்றும் வீடியோக்களாக எடுத்து டாக்டர் ஆசிக் என்பவருக்கு அனுப்பிவந்துள்ளார். இப்படி போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்து அனுப்புவதை பார்த்த பெண் ஒருவர், விடுதி காப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

சைபர் கிரைம்

சைபர் கிரைம்

அவர், ஜனனியின் செல்போனை பார்த்தபோது அதுபோன்ற போட்டோக்கள், வீடியோக்கள் நிறைய இருந்துள்ளன. இதையடுத்து விடுதி மேலாளர் மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அங்கிருந்து சைபர் கிரைம் போலீஸாருக்கு புகார் மாற்றப்பட்டு, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்கை விசாரித்து வந்தார்.

அதிர்ச்சி தகவல்

அதிர்ச்சி தகவல்

காவல்துறையினரின் விசாரணையில் ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் அனுப்பியது உண்மை எனத் தெரிந்தது. இதனால், டாக்டர் ஆசிக், மாணவி ஜனனி ஆகிய இருவரையும் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆஷிக்கிற்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் அவரது மருத்துவமனையில் ஜனனி பகுதி நேரமாக வேலை பார்த்து வந்திருக்கிறார்.

 உடைமாற்றும் வீடியோக்கள்

உடைமாற்றும் வீடியோக்கள்

அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பல நேரங்களில் தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது தனது நிர்வாண வீடியோக்களை ஜனனி செல்போனில் பதிவு செய்து மருத்துவர் ஆசிக்கிற்கு அனுப்பி வந்துள்ளார். இதை அடுத்து உன்னுடன் தங்கியிருக்கும் மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களையும் தனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஆசி கேட்க விபரீதத்தை உணராத ஜனனி விடுதியில் பெண்கள் குளிக்கும் போதும் உடைமாற்றும் போதும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆதாரங்கள் சேகரிப்பு

ஆதாரங்கள் சேகரிப்பு

இந்த நிலையில் தான் மாணவி ஒருவர் குளிக்கும் போது அதனை வீடியோ எடுக்கும் போது ஜனனி வசமாக சிக்கி உள்ள நிலையில் இருவரது செல்போன்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். ஜனனி ஏற்கனவே ஆதாரங்களை அழித்துவிட்ட நிலையில் தற்போது சைபர் கிரைம் போலீசார் அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதோடு ஜனனி எத்தனை நாட்களாய் வீடியோ எடுத்து வந்தார் எனவும் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் முடிவில் இதில் வேறு யாருக்கும் தொடர்புள்ளாத எனத் தெரிய வரும் என்கின்றனர் போலீசார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+