எனக்கு வாக்களிப்பதாக நினைத்து வாக்களியுங்கள்.. மகனுக்காக பிரச்சாரத்தை தொடங்கினார் ஓ.பி.எஸ்!
மதுரையில் அதிமுக சார்பாக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்கினார்.
Recommended Video

மதுரை: மதுரையில் அதிமுக சார்பாக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
தமிழகம் முழுக்க தேர்தல் பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு திமுக தனது பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை இன்று காலை திருவாரூரில் தொடங்கினார். தற்போது துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.

தென் மாநிலங்களில் கவனம்
மதுரையில் அலங்காநல்லூரில் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் முடியும் வரை ஓ.பன்னீர்செல்வம் வரிசையாக பல இடங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளார். முதற்கட்டமாக மதுரையில் இருந்து தென் மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

ரவீந்திரநாத் பிரச்சாரம்
இன்று அதிகாலை ஓ.பன்னீர்செல்வமின் பிரச்சாரம் தொடங்கியது. அலங்காநல்லூரில் வீடு வீடாக சென்ற பிரச்சாரம் செய்தார். முதல்முறையாக தேனி வேட்பாளர் ரவீந்திரநாத்திற்காக ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்கிறார்.

யார் இவர்
தேனி வேட்பாளர் ரவீந்திரநாத் ஓ.பன்னீர்செல்வமின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சாரத்தில் ரவீந்திரநாத்தும் உடன் இருந்தார். இன்று மாலை ரவீந்திரநாத்திற்காக ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன கூறினார்
எனக்கே வாக்களிப்பதாக நினைத்து என் மகனுக்கு வாக்களிக்க வேண்டும், உங்களிடம் இவரை ஒப்படைக்கிறேன் நீங்கள்தான் இவரை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று மதுரை மக்களிடம் கூறி ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்து வருகிறார். விரைவில் ஓ.பன்னீர்செல்வம் தேனியிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications