பிரேமலதா மட்டும் மிஸ்ஸிங்.. கூட்டணி கட்சித் தலைவர்களுடன் மேடையேறிய ஸ்டாலின்.. செய்துகாட்டிய கமல்!
மதுரை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் கமல் பண்பாட்டு மையம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள அத்தனைக் கட்சிகளின் தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது விவாதமாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மட்டும் மிஸ்ஸாகி இருக்கிறார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றன. அந்த வகையில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் கமல் பண்பாட்டு மையம் சார்பாக மறவோம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காந்தியை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.

திமுக கூட்டணி
அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றார்.
பிரேமலதா மட்டும் மிஸ்ஸிங்
அதேபோல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் முதல்வர் ஸ்டாலின் மேடையேறினர். இந்தக் கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மட்டும் பங்கேற்கவில்லை.
ஸ்டாலின் பேச்சு
இதன் மூலமாக திமுக தலைமையிலான கூட்டணி இணக்கமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், முரசொலி பவளவிழாவில் கமல்ஹாசன் ஆற்றிய உரை என்னால் மறக்க முடியாதது. காந்தி பயங்கரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்ட போது, இந்தியாவுக்கு காந்தி நாடு என்று பெயர் சூட்டக் கோரியவர் பெரியார்.
பாஜகவின் வெறுப்பு என்ஜின்
காந்தியின் அடையாளமே இருக்கக் கூடாது என்று மத்திய அரசு நினைக்கிறது. ரூபாய் நோட்டில் இருந்தும் காந்தி படத்தை எடுத்தாலும் எடுத்துவிடுவார்கள். மதத்தை வைத்து அரசியல் செய்யும் அற்பர்களுக்கு காந்தியை பிடிப்பது இல்லை. மதவெறி புகுந்தால் முதலில் மரணிப்பது மனிதம்தான். பாஜக வெறுப்பு என்ஜின்கள் தமிழ்நாட்டிற்கு தேவையே இல்லை.
அன்பின் பாதையை மறவோம்
பெரியாரின் சமூகநீதி பார்வைதான் தேவை. கமல்ஹாசன் பேசுவது புரியவில்லை என சிலர் சொல்கிறார்கள். கமல்ஹாசன் பேசுவது புரியாமல் இல்லை. அவர்கள் புரிந்து கொள்ள விரும்பவில்லை. மீடியா மைக்குகளில் புலம்பியவர்களை நாடாளுமன்ற மைக்குகளிலும் சிலரை கமல்ஹாசன் புலம்ப வைத்துவிட்டார். அன்பின் பாதையை வலியுறுத்திய காந்தியை மறவோம் என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications