என்னாது அழகிரி மகன் துரை தயாநிதி 2024-ல் மத்திய அமைச்சரா? மதுரையை மிரட்டிய பிறந்த நாள் போஸ்டர்கள்!
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் அதகளப்படுத்தி வருகின்றன. இந்த போஸ்டர்களில் இடம்பெற்று வாசகங்கள் அரசியல் கட்சியினரை அதிர வைக்கின்றன.
மத்திய அமைச்சராகவும் திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராகவும் இருந்தார் மு.க. அழகிரி. 2014-ம் ஆண்டு அவரது தந்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

அழகிரி மவுனம்
இதன்பின்னர் கருணாநிதி உயிரோடு இருந்த காலத்திலும் அவரது மறைவுக்குப் பின்னரும் மு.க.அழகிரி திமுகவில் சேருவதற்கான சில முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் திமுகவில் அழகிரி சேர்த்துக் கொள்ளப்படவில்லை. கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அழகிரி தனிக் கட்சி தொடங்குவார் எனவும் கூறப்பட்டது. ஆனால் அழகிரி மவுனமாக இருந்துவிட்டார்.

அழகிரி- ஸ்டாலின் சந்திப்பு இல்லை
பின்னர் சட்டசபை தேர்தலில் திமுக வென்று 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியை கைப்பற்றியது. அது முதல் திமுக தலைமையுடன் இணக்கமாக போக்கில்தான் மு.க. அழகிரி குடும்பம் இருந்து வருகிறது. அதேநேரத்தில் மதுரைக்கு அடிக்கடி செல்லும் முதல்வர் ஸ்டாலின், அழகிரியை சந்திக்கவில்லை. இருவரது சந்திப்பு தொடர்பாக பல்வேறு யூகங்கள் வெளியான போதும் அதுபோல் எதுவும் நடைபெறவில்லை. முதல்வர் ஸ்டாலினும் அழகிரியும் குடும்ப நிகழ்ச்சிகளில் கூட நேரடியாக சந்தித்து பேசாமல் தவிர்த்தும் வருகின்றனர்.

துரை பிறந்த நாள்
இந்நிலையில் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் அமர்க்களமாக இன்று கொண்டாடி வருகின்றனர். துரை தயாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு வழக்கம் போல மதுரை மாநகரமெங்கும் சுவரொட்டிகளால் அதகளப்படுத்திவிட்டனர் ஆதரவாளர்கள். அதில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் பெரும் சலசலப்பையும் அதிருப்தியையும் சேர்த்தே கிளப்பிவிட்டிருக்கின்றன.

நாளைய மத்திய அமைச்சர்
அந்த சுவரொட்டிகளில் ஒன்றில், 2024-ல் மத்திய அமைச்சரே! என துரை தயாநிதிக்கு பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்வைத்து திமுகவினர் தீவிர விவாதங்களை நடத்தி வருகின்றனர். 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னர், அழகிரி திமுகவில் மீண்டும் சேர்க்கப்படலாம்; அவரது மகனுக்கு ஒரு தொகுதி வழங்கப்படலாம் என பேசி முடித்துவிட்டார்களோ என்னவோ என்கிற கிசுகிசுப்பும் நம் காதில் வந்து விழுந்தன.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications