ஓரணியில் திரள்வோம் என்று சொல்கிறீர்கள்.. திரண்டு என்ன செய்யப்போறீங்க.. திமுகவை கலாய்த்த சீமான்
சென்னை: நான்கரை ஆண்டுகளாக சும்மா இருந்துவிட்டு இப்போது மானம் காக்கிறேன்.. மண் காக்கிறேன்.. மொழி காக்கிறேன் என்று ஓரணியில் திரள்வோம் என்று சொல்கிறார்கள்.. ஓரணியில் திரண்டு என்ன செய்யப் போகிறார்கள்.. என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஓரணியில் திரள்வதே கொள்ளையடிப்பதற்காகத் தான்.. என்றும் அவர் கூறினார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருடர்களை அதிகாரத்தில் வைத்தால் அப்படித்தான்.. பிறகு பாஸ்வேர்டை திருடுறான் என சொன்னால் இதில் நான் என்ன சொல்ல முடியும். ஒன்று கூடுவதே இதற்காகத் தான். ஓரணியில் திரள்வோம் என்பதே, ஒன்றாக கூடி திருடுவோம் என்பதற்காகத் தான். கூடி திருடுவோம்.. கூடி கொள்ளையடிப்போம்.. கூடி கொலை பண்ணுவோம்..

இதையெல்லாம் தானே நீங்க கேக்கனும்.. எங்கிட்ட கேக்குறீங்களே.. 4 ஆண்டுகளாக என்ன பண்ணிட்டு இருந்தீங்க.. மண் காக்காம.. மானம் காக்காம.. மொழி காக்காம என்ன செய்து கொண்டு இருந்தீர்கள். இப்போ தான் மண் காக்க போறீங்களா.. இவ்வளவு நாட்களாக என்ன செஞ்சீங்க.. நாங்க தான் மண்ணை திருடி விற்றுக் கொண்டு இருந்தோம்.. நாங்க தான் திருடி தின்னுட்டு இருந்தோம்.
மலையை கல் குவாரி ஆக்கி, நொறுக்கி எம் செண்ட் ஆக மாற்றி விற்றுக் கொண்டு இருக்கோம். ஆற்று மணல் எல்லாத்தையும் நாங்க தான் விற்றோம்.. மொழியை நாங்க தான் அழித்தோம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ் எழுத்து இருக்கிறதா பாப்போம்.. எழுத்து இருக்கிறது.. அது என்ன மொழியில் இருக்கிறது.. இங்கிலீஷ தமிழில் எழுதி வைத்து இருக்கீங்க..
தமிழக முதல்வரே ரெயின்போன்னு எழுதுங்க என்று சொல்றார்.. வானவில் என்று எழுதுங்க என சொல்லவில்லை. இது தான் உங்க தமிழ்.. அடுத்து மானம்.. மானம் என்று ஒன்று இருக்கா.. தன்மானத்துக்காக உயிரை விட்ட ஒரு இனத்தின் கூட்டத்தை, சுயமரியாதை கூட்டத்தை ஆயிரம் ரூபாய், 500 ரூபாய், சேலை, வேஷ்டி.. அரிசி, பருப்பு, சாராயத்துக்கு கையேந்த விட்டு மானங்கெட்ட, பிச்சைகார கூட்டமாக மாற்றிவிட்டு..
இன்று வந்து மண் காக்க போகிறேன்.. மானம் காக்கப் போகிறேன் என பேசுகிறீர்கள். உங்க கிட்ட இருந்தது தான் இதை எல்லாம் காக்க வேண்டும். இதையெல்லாம் யாரிடம் இருந்து காக்க வேண்டும்.. 6 மாதத்தில் தேர்தல்.. இப்போ வருது அக்கறை.. இப்போ தான் மண் தெரியுது.. மானம் தெரியுது.. மொழி தெரியுது.. ஓரணியில் திரள்வோம் என்று சொல்கிறீர்கள்.. திரண்டு என்ன செய்யப்போறீங்க.. அத சொல்லுங்க..
ஒரு மாநகராட்சியில் மட்டும் 150 கோடி.. அப்போது நாடு முழுக்க எத்தனை கோடி கொள்ளையடித்து இருப்பார்கள்.. கேட்டால் காசு இல்லை. ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை.. ஆகஸ்டு முதல் வாரத்தில் மிகப் பெரிய போராட்டம் இருக்கு. இவ்வாறு அவர் கூறினார்.
-
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
இனி யாருக்காக அரசியல் செய்யணும்.. கலக்கத்தில் சீமான்.. லைம்லைட்டை இழந்து நிற்கும் நாம் தமிழர்? -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications