பூபாலனை விட பல மடங்கு மோசமான மாமனார்! மருமகளிடம் பேசும் ஆடியோவை கேளுங்க! Diplomatic பேச்சு!
மதுரை: மதுரையில் வரதட்சிணை கொடுமையால் தனியார் பள்ளி ஆசிரியையின் கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாமனாருடன் தங்கப்பிரியா பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது. பூபாலன், விஜயா, அனிதா ஆகியோரின் குணங்கள் வீடியோவில் அதிரடியாக தெரியும் நிலையில் மாமனார் செந்தில் குமரன் டிப்ளமேட்டிக்காக மருமகளை ஆதரிப்பது போல் பேசி கடைசியில் அவர் நிற்கும் மைய புள்ளியும் பணமாகவே உள்ளது என்பது வேதனையிலும் வேதனை!
தங்கப்பிரியாவின் கணவர் பூபாலன், தனது தங்கை, தாயுடன் பேசிய அதிர்ச்சி ஆடியோ வைரலான நிலையில், தற்போது தங்கப்பிரியாவிடம் மாமனார் செந்தில் குமரன் பேசும் ஆடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆடியோவில் தங்கப்பிரியா, தனது மாமனாரிடம், கணவர் பூபாலன் செய்யும் வரதட்சிணை கொடுமைகளை சொல்லி வருத்தப்படுகிறார். அந்த உரையாடல் பின்வருமாறு:
தங்கப்பிரியா: நகைச் சீட்டு போடலாம்னு சொன்னால், "ஏன் நகை வாங்கி போட்டுக்க போறியாக்கும்" என உங்கள் மகன் பேசுகிறார். எது பேசினாலும் விதண்டாவாதம் செய்கிறார். சரி நகை சீட்டு வேண்டாம், வேறு மாதம் ரூ 2000 செலுத்தி சீட்டு போடலாம் என சொன்னாலும் "பார்க்கலாம் பார்க்கலாம்"னு சொல்றாரு.
நான் எங்கப்பாகிட்டரூ 2000 வாங்கி நகைச் சீட்டு போட்டேன். அது முடிந்தது. உடனே "நீ எனக்காக இதுவரை என்ன செய்திருக்கே"னு கேட்டார். சரி நானும் அந்த பணத்தில் அவருக்கு மோதிரம் வாங்கி கொடுத்தேன்.
மாமனார்: என்னாது உங்கப்பா கொடுத்த பணத்துல நீ ஏன் அவனுக்கு நகை வாங்கி கொடுத்தே. இதெல்லாம் தப்பும்மா என மருமகளுக்கு ஆதரவாகவே பேசுகிறார் (11 மாத சீட்டு என்றால் ஒரு 25 ஆயிரம் வந்திருக்கும். அதில் கால் பவுன் வாங்கியிருக்கலாம். 15 மாத சீட்டு என்றால் 32 ஆயிரம் வந்திருக்கும் 3 கிராம் அல்லது 4 கிராம் (அரை பவுன்) வந்திருக்கும்).
தங்கப்பிரியா: புள்ளைங்களுக்கு காது குத்தும் போது மாமனாரிடம் சொல்லி இருவருக்கும் தனித்தனியே தலா 5 பவுன்களை வாங்கி தர சொல்லு, சீர் வைக்க சொல்லி என்கிறார்.
மாமனார்: என் மகனின் மாமனார் இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என சொல்லக் கூடாது. அவர்களுக்கு தெரியும், முறை என ஒன்று இருக்கிறது, அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய சொல் என்றுதானே சொல்ல வேண்டும்.
தங்கப்பிரியா: ஆமாம் மாமா, நானும் அதைத்தான் சொல்கிறேன். என் அப்பா, அம்மாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும் என நான் சொன்னால் உங்கள் மகன், இதைத்தான் செய்ய வேண்டும் என்கிறார்.
மாமனார்: அது தவறும்மா, 2 பவுனோ, 5 பவுனோ வைக்கலாம் என்பது ஏதோ அவர்களுக்கு தெரியும். இதுதான் வேண்டும் என மாமனாரிடம் கேட்க கூடாது. அவனுக்கு புத்தி கெட்டு போச்சு (நல்லவர் போல் பேசுகிறார்). உனக்கு வேண்டியதை நீ கேட்டு வாங்கிக்கோ, அவன் சொல்றதையெல்லாம் கேட்காதே.
தங்கப்பிரியா: ஆமா மாமா, எனக்கு ஒரு கிராம் செய்தாலும் போதும்தான்.
மாமனார்: எவ்வளவு சொல்றே (ட்விஸ்ட் ஆரம்பம்), ஒரு கிராமா, ஏன் உங்கப்பா அம்மாவுக்கு வசதி இல்லையா, நீ பேசுறது தப்பு, அதெப்படி ஒரு கிராம் போதும்னு சொல்லுவே!, வீடுன்ற வீட்டில் மாமனார், மைத்துனர் எல்லாம் முறை செய்ய வேண்டியது கடமைதான், அதற்காக இவ்வளவு குறைவாகவா செய்வது
தங்கப்பிரியா:என்ன மாமா அப்படி சொல்றீங்க, எங்கப்பா, அம்மா அவங்க சக்திக்கு மேலயே செய்துட்டாங்க.
மாமனார்: உங்கப்பா, அம்மா என்ன செய்துட்டாங்க பாப்பா!
தங்கப்பிரியா: எனக்கு மருத்துவ செலவுகளை பார்க்குறாங்க, என் குழந்தையை படிக்க வைக்கிறாங்க.. இன்னும் என்ன செய்வாங்க.
மாமனார்: இது தப்பு, 15 ஆயிரம் கொடுத்து படிக்க வைப்பதெல்லாம் ஒரு பெரிய விஷயம் போல பேசாதேம்மா
தங்கப்பிரியா: உங்கள் மகன் எனக்குனு என்ன செய்திருக்கிறார். உடம்பு சரியில்லை , மருத்துவமனைக்கு கூட்டிட்டு போங்கன்னு சொன்னதுக்கு "எனக்கு வேலை இருக்கு, உங்கப்பாவ வரச்சொல்" என சொன்னார்.
மாமனார்: ஆமாம்மா , அவன் பார்க்கும் உத்தியோகம் அப்படி, ஏதோ ஓடுறான், ஓடியாறான், சாப்பிடுறான், தூங்குறான், மறுபடியும் ஓடுறான், அவனுக்கு அதுக்கெல்லாம் டைமே இல்லைம்மா.
தங்கப்பிரியா: சரி மாமா நான் ஏத்துகிறேன் உங்க மகனுக்கு டைம் இல்லைன்றத. ஆனால் நான் கிளம்பும் போது 15 நிமிடம் பர்மிஷன் போட்டதாக சொல்லியிருந்தாரு. நான் கிளம்பும் போது என்னென்ன கொண்டு போறேனு என் பையை ஆராயுறாரு. நான் கிளம்பவ 45 நிமிடங்கள் ஆகிவிட்டது. என் அப்பா வீட்டில் விட்டிருந்தால் நான் அங்கிருந்து மருத்துவமனைக்கு போயிருப்பேனே! டைமே இல்லைனு சொல்லிட்டு எதற்கு என்னையே வேவு பார்க்கணும்?
மாமனார்: இதெல்லாம் ஆரம்பத்திலேயே நீங்கலாம், இது என் பொருள், உன் பொருள்னு பிரித்து பிரித்து பார்த்ததால் வந்தது. இவ்வாறாக இந்த உரையாடல் இருக்கிறது.
அதாவது வரதட்சிணை என கேட்டால் அது தவறு என இன்ஸபெக்டர் செந்தில் குமரனுக்கு தெரிகிறது. அதே வேளையில் ஒரு கிராம்லாம் செய்யக் கூடாது என கூறிவிட்டு 2 பவுன், 5 பவுன் என்றால் கூட செய்யட்டும் என மருமகளுக்கு ஆதரவாக பேசுவது போலவே பேசி இவரும் பணத்திலேயே குறியாக இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
மருமகளை பாப்பா என அழைத்து பாசக்காரர் போல் தன்னை வெளிக்காட்டிக் கொண்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றுகிறார் மாமனார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் செந்தில்குமரன். இவரது மகன் பூபாலன். இவர் மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக இருக்கிறார்.
இந்த நிலையில் பூபாலனுக்கும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கப்பிரியாவுக்கும் 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். தங்கப்பிரியா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
தங்கப்பிரியாவுக்கு வரதட்சிணை கொடுமை செய்ததாக புகாரின் பேரில் மாமனார், மாமியார், நாத்தனார், கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். செந்தில் குமரன், பூபாலன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பூபாலன், தனது தாய், தங்கையிடம் பேசிய ஆடியோ வைரலான நிலையில் மாமனாரும் மருமகளும் பேசிக் கொண்ட ஆடியோ தற்போது வெளியானது.












Click it and Unblock the Notifications