கண்டக்டர் இல்லாமல் பஸ்சை எடுத்துக்கொண்டு டிரைவர் செய்த காரியம்! மதுரை சாலையில் சிக்க வைத்த பயணிகள்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்தையே சுற்றி சுற்றி ரவுண்டு அடித்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. அது மட்டும் இன்றி கண்டக்டர் இல்லாமல் பேருந்தை எடுத்துக்கொண்டு மதுரை சாலையில் கொண்டு டிரைவர் நிறுத்தினார். இதனால் கோபம் அடைந்த பயணிகள் டிரைவரிடம் வாக்குவாதம் செய்த போதுதான் அவர் குடிபோதையில் இருந்தது கண்டறியப்பட்டது.
பேருந்துகளில் தன்னை நம்பி 40 பயணிகள் பயணம் செய்கிறார்கள் என்ற பொறுப்புணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் ஒரு சில டிரைவர்கள் நடந்துகொள்ளும் விதம் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. குடிபோதையில் வண்டியை ஓட்டுவது, செல்போனில் ரீல்ஸ் பார்த்துக்கொண்டே பஸ்சை ஓட்டுவது, சாப்பிட்டுக்கொண்டே ஓட்டுவது என அஜாக்கிரதையாக சில பேருந்து ஓட்டுநர்கள் நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிர்ச்சியை அளிக்கிறது.

மீண்டும் மீண்டும் ரவுண்ட் அடித்த பஸ்
இது தொடர்பான சம்பவங்களை அதிகாரிகள் கவனத்திற்கு சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும், ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் மது போதையில் செய்த காரியம் பயணிகளை பீதி அடைய வைத்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் இரவு 8.20 மணி அளவில் சிவகங்கை வழியாக மானாமதுரைக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்த பேருந்து புறப்பட்டது. ஆனால், பேருந்து திருப்பத்தூர் பேருந்து நிலையத்தை சுற்றி சுற்றி ரவுண்டு வந்தது.
மதுபோதையில் பஸ் டிரைவர்
பின்னர் மீண்டும் பேருந்து நிலையம் உள்ளேயே வந்து நின்றது. இதனால் பேருந்தில் ஏதேனும் பழுது இருக்கலாம் என பயணிகள் நினைத்தனர். ஆனால், மீண்டும் அதேபோல பேருந்து நிலையத்தை பஸ் சுற்றி வந்தது. இதையடுத்து, பயணிகள் அதிர்ச்சி அடைந்தபடி பேருந்தை விட்டு வேகமாக கீழே இறங்கினர். பின்னர் கண்டக்டரிடம் இது பற்றி கேட்ட போது, அவர் சரியான பதிலை அளிக்கவில்லை..
டிரைவரிடம் போய் கேட்ட போது, அந்த டிரைவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனை அலுவலகத்துக்கு உடனடியாக பயணிகள் தகவல் தெரிவித்தனர்.
டிரைவரிடம் வாக்குவாதம் செய்த பயணிகள்
இதற்கிடையே கண்டக்டரை விட்டுவிட்டு, டிரைவர் மட்டும் பஸ்சில் ஏறி அவசரம் அவசரமாக பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். இந்த முறை பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து, மதுரை செல்லும் சாலையில் பேருந்தை டிரைவர் நிறுத்தியுள்ளார். இதனால் கோபம் அடைந்த பயணிகள் அவரிடம் வாக்குவாதம் செய்தனர், அப்போது டிரைவர் மது போதையில் உளறியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பேருந்தை மீண்டும் பஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு, பேருந்தில் இருந்து இறங்குமாறு டிரைவரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர், கீழே இறங்க மறுத்ததோடு, மானாமதுரைக்கு தானே பேருந்தை ஓட்டிச்செல்வதாக கூறி அடம்பிடித்தார்.
பயணிகள் கடும் சிரமம்
இதைத் தொடர்ந்து கண்டக்டர், பயணிகள், போலீசார் என அனைவரும் தொடர்ந்து கூறியதன்பேரில் கீழே இறங்கினார். இதற்கிடையே மாற்று டிரைவர் வரவழைக்கப்பட்டு, அந்த பேருந்து மானாமதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக அந்த பேருந்து புறப்பட்டு சென்றது. பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் பணிமனை மேலாளர் கூறுகையில், மானாமதுரை செல்லும் பேருந்தை டிரைவர் மனோகரன் மதுபோதையில் இயக்கியது தெரியவந்ததால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மண்டல மேலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications