மத்திய அமைச்சர் பதவியை ஏற்க மறுத்த வைகோ! அத்வானியை தூது அனுப்பி 2 மணி நேரம் பேசிய வாஜ்பாய்! -துரை

Subscribe to Oneindia Tamil

மதுரை: 2 முறை மத்திய அமைச்சராகும் வாய்ப்பும் கிடைத்தும் அதனை ஏற்க மறுத்தவர் வைகோ என மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தனது அமைச்சரவையில் வைகோவை எப்படியாவது இடம்பிடிக்கச் செய்ய வேண்டும் என கடும் முயற்சிகளை மேற்கொண்டார் என்றும் வைகோவின் டெல்லி இல்லத்துக்கு அத்வானியை தூது அனுப்பி 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார் எனவும் பழைய பிளாஷ்பேக் நிகழ்வை பேசினார் துரை வைகோ.

Durai Vaiko says, Vaiko refused to accept the opportunity to become Union Minister twice

வைகோவை பொறுத்தவரை அவர் ஒரு ''அரசியல் அதிசயம்'' என்று சிலாகித்த துரை வைகோ, தேடி வந்த பதவிகளை எல்லாம் வேண்டாம் எனச் சொன்னவர் தனது தந்தை வைகோ என உருகினார். இப்படிப்பட்ட வைகோவை பார்த்து, தனது மகனை சட்டமன்ற உறுப்பினராக்குவதற்காக 6 சீட்களை வாங்கிக்கொண்டு திமுகவிடம் மதிமுகவை அடகுவைத்துவிட்டார் என குள்ளநரிக்கூட்டம் ஒன்று விமர்சித்து வருகிறது எனப் பேசி உட்கட்சி பாலிடிக்ஸையும் உரையில் கொண்டு வந்தார்.

Durai Vaiko says, Vaiko refused to accept the opportunity to become Union Minister twice

தன்னை பொறுத்தவரை தாம் அரசியலுக்கு வந்தவனல்ல தொண்டர்களால் இழுத்துவரப்பட்டவன் என்று பேசிய துரை வைகோ, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தாம் தேர்தலில் போட்டியிடவில்லை என தனது தந்தையிடம் கூறியபோது அதனைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்ததாக தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+