ஒன்றரை லட்சம் பேர் + 10 தலைவர்கள் + மோடி.. எடப்பாடி பழனிசாமியின் ஆபரேஷன் மதுரை.. அதிரும் அதிமுக
மதுரை: எடப்பாடி பழனிசாமி சார்பாக மதுரையில் நடக்க உள்ள அதிமுக கூட்டத்திற்காக முக்கியமான சில திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் தற்போது லோக்சபா தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார். மாவட்டம் வாரியாக தேர்தல் பணிகளை எடப்பாடி பழனிசாமி முடுக்கிவிட்டுள்ளார். அதிமுகவின் உட்கட்சி மோதலும் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது.

யாராவது தலைவர் ஆனால் போதும் சண்டை போடுவதை நிறுத்துங்கள் என்று தொண்டர்களே சொல்லும் அளவிற்கு இத்தனை காலமாக நடந்து வந்த சண்டை ஒரு வழியாக முடிவிற்கு வந்து உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒருவழியாக.. கன்னித்தீவு கதை முடிவிற்கு வந்துள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் வெற்றிபெற்ற எடப்பாடி பழனிசாமி வேறு ஒரு முக்கியமான திட்டத்தை வகுத்து இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார். அதிமுக 2.0 இது உணர்த்தும் விதமாக, அதிமுகவை தான் கைப்பற்றிவிட்டோம் என்பதை உணர்த்தும் விதமாக மதுரையில் அவர் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பொதுக்கூட்டத்தை அவர் மதுரையில் நடத்தவும் முக்கியமான ஒரு காரணம் உள்ளதாம். எடப்பாடி என்றால் கொங்கு மண்டல தலைவர் என்ற இமேஜ் இருக்கிறது. அதை உடைக்க எடப்பாடி நினைக்கிறாராம்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்த போது எடப்பாடி மதுரையில் இருந்தார். மதுரை வந்தாலே எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று இந்த தீர்ப்பின் போது அவர் கூறினார். அதோடு முத்துராமலிங்க தேவர் பெயரையும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில்தான் முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்த உள்ளார் என்கிறார்கள். ஓ பன்னீர்செல்வம் காரணமாக முக்குலத்தோர் அப்செட் ஆக கூடாது என்பதற்காக இந்த கூட்டத்தை அவர் நடத்த வாய்ப்பு உள்ளது. ஆர்பி உதயகுமார் ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் மட்டுமின்றி திமுக, பாஜகவும் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த கூட்டம் இருக்க போகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இன்னொரு பக்கம் பாஜகவின் டெல்லி தலைமையுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை அவர் இந்த கூட்டத்தில் நிரூபிக்க உள்ளாராம். அதன்படி எடப்பாடி பழனிசாமி சார்பாக மதுரையில் நடக்க உள்ள அதிமுக கூட்டத்திற்காக முக்கியமான சில திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக பிரதமர் மோடியை இந்த கூட்டத்தில் மேடை ஏற்ற எடப்பாடி முடிவு செய்துள்ளாராம். அதோடு கூட்டணி கட்சி தலைவர்கள் 10 பேரை மேடைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளாராம். பொதுவாக திமுகதான் தேசிய தலைவர்களை, கூட்டணி தலைவர்களை மேடைக்கு கொண்டு வரும். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி தலைவர்களை மேடைக்கு கொண்டு வந்து பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளாராம்.
1 லட்சம் மக்களை கூட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று 60 மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டு உள்ளாராம். ஒவ்வொருவரும் தலா 3 ஆயிரம் பேரையாவது களமிறக்க வேண்டும் என்று எடப்பாடி இந்த கூட்டத்திற்காக அழைத்து வர வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளாராம். இதனால் அதிமுக வரலாற்றில் நடந்த கூட்டங்களில் பிரம்மாண்ட கூட்டமாக இது இருக்கும் என்கிறார்கள்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications