மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எடப்பாடி தேர்தலுக்கு பிறகு ராஜினாமா செய்து விடுவார்... டிடிவி தினகரன் சொல்கிறார்

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரையில் டிடிவி தினகரன் பேட்டி -வீடியோ

    மதுரை: அதிமுக கொடியை பயன்படுத்துவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும் போது, சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் என டி.டி.வி தினகரன் குற்றம்சாட்டினார்.

    மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: திமுக கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் எங்களுக்கு ஆதரவாக இல்லை, 3 எம்.எல்.ஏ களுக்கு நோட்டீஸ் கொடுத்த பிறகு திமுக தீர்மானத்தால் ஒன்றும் பலன் இல்லை என்றார்.

     Edappadi Palanisamy will resign after the election Says TTV Dinakaran

    உள்ளாட்சித் தேர்தலில் 60 க்கு 40 என்கிற விகிதத்தில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தாம் கூட்டணி உள்ளது. தேர்தலுக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்து விடுவார் என்றும் ஆரூடம் தெரிவித்தார்.

    சசிகலா வழக்கு நிலுவையில் உள்ளதால், 3 எம்.எல்.ஏ க்களும், ஆதரவாக பிரச்சாரம் செய்வதில் தவறில்லை என்று கூறிய தினகரன், அதிமுக கொடியுடன் காவி கலர், தாமரை சேர்த்து கொண்டால் பொருத்தமாக இருக்கும், புல்வாமா தாக்குதல் பாதுகாப்பில் குறைபாடுகள் உள்ளதே காரணம் என்றும் தெரிவித்தார்.

    ராமர் கோவில் விவகாரத்தில் மோடி 'மூச்'.. பாஜக 'கப்சிப்'... 'அயோத்தி' தொகுதி கள நிலவரம் என்ன தெரியுமா?ராமர் கோவில் விவகாரத்தில் மோடி 'மூச்'.. பாஜக 'கப்சிப்'... 'அயோத்தி' தொகுதி கள நிலவரம் என்ன தெரியுமா?

    அதிமுகவுக்கு தொண்டர்கள் பலம் இல்லை, பண பலம் மட்டுமே உள்ளது. 22 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். நாங்கள் வெற்றி பெற்றால் திமுகவுக்கு ஆதரவு எப்படி கொடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

    English summary
    TTV Dinakaran Said that Edappadi Palanisamy will resign after the election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X