மதுரையில் மனம் குளிர்ந்த எடப்பாடி! 3 கிலோமீட்டர் தூரம் ஸ்தம்பித்த கார்! கூட்டம் ஓட்டாகுமா?
மதுரை: மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமியால், 3 கிலோமீட்டர் தூரம் இஞ்ச் பை இஞ்சாக நகர்ந்து தான் மேடைக்கு செல்ல முடிந்தது. அந்தளவுக்கு அவரே எதிர்பார்க்காத கூட்டம் திரண்டிருந்தது.
இதனால் மனம் குளிர்ந்து போன எடப்பாடி பழனிசாமி, தேர்தல் கூட்டணி இட பங்கீடு தொடர்பாக சில முக்கிய முடிவுகளை விரைவில் எடுப்பார் எனத் தெரிகிறது. இதனிடையே மாநாடுக்கு திரண்ட கூட்டமெல்லாம் ஓட்டாகுமா என்ற கேள்வியும் எழுந்து நிற்கிறது. காரணம், எஸ்.டி.பி.ஐ. மாநாட்டில் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மட்டும் கலந்துகொள்ளவில்லை. அந்த தொண்டர்களின் நண்பர்கள், சுற்றத்தார், கட்சி சாராத இஸ்லாமிய பொதுமக்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாவட்டத்தில் 1 தொகுதியை எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு அதிமுக ஒதுக்குமா அல்லது சட்டமன்றத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என்ற உறுதியை அதிமுக அளிக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
இதனிடையே எஸ்.டி.பி.ஐ. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;
1. முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை - சட்டரீதியான விடுதலை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
2. நீட் தேர்வுக்கு விலக்கு - தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றிட வேண்டும்.
3. சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் அவல நிலையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை விரைவில் செயல்படுத்த வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கான பீக் ஹவர் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
5. சிறுபான்மை முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்.
6. சச்சார் கமிட்டி போன்று தமிழக முஸ்லிம்களின் வாழ்நிலைகள் குறித்து அறிய கமிட்டி அமைக்க வேண்டும்.
7. பள்ளிவாசல், தேவாலயம் கட்டும் அனுமதியை எளிமையாக்க வேண்டும்.
8. பல்கலைக்கழக துணை வேந்தர், டி.என்.பி.எஸ்.சி. பொறுப்புகளுக்கு சிறுபான்மை சமூகத்தவர்களையும் நியமிக்க வேண்டும்.
9. ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தை தொய்வின்றி தொடர வேண்டும்:
10. நில ஒருங்கிணைப்பு சிறப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
11. அரசியல் பழிவாங்கும் ஏவல் கருவியாக மாற்றப்படும் விசாரணை அமைப்புகள்! - கண்டிக்கத்தக்கது
12. சிறுபான்மை வெறுப்பு நடவடிக்கைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிட வேண்டும்.
13. கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தும் பாஜக அரசின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
14. படித்த இளைஞர்களை ஏமாற்றாமல் அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை வெளிப்படைத் தன்மையுடன் விரைவாக நிரப்ப வேண்டும்.
15. அனைத்துத் துறைகளிலும் சமூக நீதியை நிலைநாட்ட சமவாய்ப்பு ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும்.
16. ஆக்கிரமிப்பு வக்பு சொத்துக்களை மீட்டு, அதன்மூலம் சிறுபான்மை சமூகம் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
17. மாநில சிறுபான்மை சமூக அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பதவி உயர்வு வழங்கப்பட (Conferred) வேண்டும்.
18. தமிழகத்தில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு தனியாக அமைச்சகம் அமைக்க வேண்டும்.
19. விவசாய நிலங்களை பாழ்படுத்தும் திட்டங்கள், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் அழிவுத் திட்டங்கள் ஆகியனவற்றிலிருந்து தமிழகத்தை பாதுகாக்க வேண்டும்.
20. விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநிதித்துவம் கொண்டுவர வேண்டும்.
21. தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
22. பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமையை உறுதி செய்வதோடு, 33% இடஒதுக்கீட்டை விரைவில் விரைவில் செயல்படுத்த வேண்டும்.
23. தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும்.
24. நலிவடைந்துவரும் சிறு, குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்த வேண்டும்.
25. சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவது அரசியலமைப்பிற்கு எதிரானது.
26. தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு எதிராக அதிகரித்துவரும் சாதிய தாக்குதல்களை தடுத்திட வேண்டும்.
27. இந்திய குற்றவியல் நீதி அமைப்பை மாற்றும் புதிய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
28. அரசு வேலைவாய்ப்பில் தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி நிறுவனத்தின் கல்விச் சான்றிதழை அங்கீகார குறைப்பு செய்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
29. மதச்சார்பற்ற இந்திய நாட்டை அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும்.
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications