8 கிடக்குது.. 2+3 படுதோல்வி.. வாங்குனது மறந்துடுச்சா? ஓபிஎஸ் டீம் தாக்குதலுக்கு எடப்பாடி அணி பதிலடி!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வியை கையில் எடுத்த ஓபிஎஸ் தரப்புக்கு பதிலடி கொடுத்துள்ளது எடப்பாடி அணி.
மதுரை : எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக வந்த பிறகு 8 தேர்தல்களில் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ளதாக ஓபிஎஸ் அணியினர் விமர்சித்து வரும் நிலையில், ஓபிஎஸ் தனது சொந்த மண்ணிலேயே அதிமுகவுக்கு தொடர் தோல்வியைத் தேடித் தந்தவர் என பதிலடி கொடுக்கின்றனர் ஈபிஎஸ் தரப்பினர்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக படுதோல்வி அடைந்ததைக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை அட்டாக் செய்து வருகிறது.
அதிமுக ஈபிஎஸ் கைக்கு வந்த பிறகு எல்லா தேர்தலிலும் தோல்வியையே சந்தித்து வருவதாக ஓபிஎஸ் தரப்பினர் விமர்சித்து, அதனை தொண்டர்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் தோல்விகள்
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இது அதிமுக சந்தித்த 8வது தோல்வி. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019ல் நடந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், 2019 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், 2021ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது அதிமுக.

எடப்பாடிக்கு எதிராக
இதனைக் குறிப்பிட்டு ஓபிஎஸ் அணியினர், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஈபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்த நிலையில், கட்சியில் தனது பிடியை இழந்து வருகிறார் ஓபிஎஸ். இந்த நேரத்தில் ஈரோடு கிழக்கு படுதோல்வியை வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க முயல்கிறார் ஓபிஎஸ். 8 தோல்விகளை கண்ட எடப்பாடி பழனிசாமி என ஓபிஎஸ் அணியினர் கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.

பாயிண்டை பிடித்த ஈபிஎஸ் அணி
இதற்கு ஈபிஎஸ் தரப்பும் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. 2019ல் நடந்த 22 தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியில் உள்ள 2 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியடைந்தது, ஆனால், தேனி எம்பி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத் வெற்றி பெற்றார், அதேபோல, 2021 சட்டமன்ற தேர்தலில் பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் அதிமுக தோற்றது. போடியில் மட்டும் ஓபிஎஸ் வெற்றி பெற்றார். தங்கள் சுயநலம் மட்டுமே பெரிதென நினைத்து கட்சியை தோற்கடித்தவர் ஓபிஎஸ் என விமர்சித்து வருகின்றனர்.

ராஜன் செல்லப்பா
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, "ஓ.பன்னீர்செல்வம் ஓடி ஒளிந்துவிட்டார். அரசியலுக்கு அவரோ, அவரது குடும்பத்தினருக்கோ தகுதி இல்லாமல் ஓடி ஒளிந்துவிட்டனர். மூன்று முறை முதலமைச்சர் பதவியில் இருந்த ஓபிஎஸ், ஜெயலலிதாவிடம் பேசி மக்களுக்காக எந்தவித திட்டங்களையும், பணிகளையும் செய்யவில்லை. அவரால் எதுவும் செய்ய முடியாத ஓபிஎஸ் தற்போது ஓடி ஒளிந்துள்ளார்.

திமுகவிடம் அடகு
ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தபோது மதுரை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கி உள்ளார். அதனால்தான் எடப்பாடி பழனிசாமியை தென் மாவட்ட மக்கள் நம்புகிறார்கள். அவர் மட்டும் இல்லை என்றால் இன்றைக்கு இந்த இயக்கத்தை சிலர் திமுகவிடம் அடகு வைத்திருப்பார்கள். அதிமுகவிற்கு தேர்தலின் போது ஒரு முறை தோல்வி என்றால், மறுமுறை வெற்றி. இதுவே அதிமுகவின் வரலாறு.

2+3 தோல்வி.. ஓபிஎஸ்ஸுக்கு தகுதி இல்லை
2019 ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக இருந்தபோது ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. இரண்டு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. அதிமுக தோல்வி அடைந்தது. அது மட்டுமல்லாது 2021 சட்டமன்றத் தேர்தலிலும் பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் அதிமுக தோல்வி அடைந்தது. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதே அதிமுகவிற்கு தோல்வியை தந்த ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை" என விமர்சித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications