கலைஞர், ஸ்டாலினை பக்குவமாக வளர்த்தார்.. ஆனால் உதயநிதியை.. செல்லூர் ராஜு கடுகடு
திமுக அரசை சரமாரியாக விமர்சித்துள்ளார் செல்லூர் ராஜூ
மதுரை: "கலைஞர், மு.க.ஸ்டாலினை அரசியலில் நிதானமாக, பக்குவமாக வளர்த்தார்... ஆனால் உதயநிதியை அமைச்சராக்க நினைப்பது பாஸ்ட்புட் அரசியலாகும்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காட்டமாக விமர்சித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அந்த வகையில், மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் செல்லூர் 50 அடி ரோட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்எல்ஏ தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இயக்கம்
அதிமுக என்ற இயக்கத்தை வென்றவரும் இல்லை, கடவுளை கண்டவரும் இல்லை.. கடந்த 10 ஆண்டுகாலமாக தமிழக மக்களுக்கு சிறப்பான ஆட்சியை தந்த அதிமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தது... மக்கள் எல்லோரும் அதிமுகவுக்குதான் வாக்களித்தோம், ஆனால், ஏன் நீங்கள் வெற்றி பெறவில்லை என்கிறார்கள்.. திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை... ரவுடிகள் ராஜ்ஜியம் தலை தூக்கி விட்டது.

அதிருப்திகள்
போலீசாருக்கும் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.. இந்த ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள்.. நிறைவேற்றப்படவில்லை.. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னாங்களே, ஆனால் தரவில்லை.,.. கியாஸ் விலையில் 100 ரூபாய் குறைப்போம் சொன்னாங்களே, ஆனால், செய்யவில்லை. நீட் தேர்வு ரத்து என்றார்களே, எதுவும் நடக்கவில்லை... அதனால் திமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

வாக்குறுதிகள்
தேர்தல் நேரத்தில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை... உதயநிதியை மக்கள் அமைச்சராக்க விரும்புகிறார்கள் என்று திமுகவினர் அவர்களாகவே சொல்லி வருகிறார்கள். கலைஞர், மு.க.ஸ்டாலினை அரசியலில் நிதானமாக, பக்குவமாக வளர்த்தார்... ஆனால் உதயநிதியை அமைச்சராக நினைப்பது பாஸ்ட்புட் அரசியலாகும்.

அதிமுக
கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது... 100 ரூபாயில் தொடங்கி 2500 ரூபாய் வரை மக்களுக்கு கொடுத்து உதவியது அதிமுக அரசு. ஆனால் தற்போது திமுக அரசு பொங்கல் பரிசு பற்றி இதுவரை எதுவும் சொல்லாமல் மவுனம் சாதித்து வருகிறது. கடைசியாக நாங்கள் 2500 ரூபாய் கொடுத்தோம்... அதனால், வருகிற பொங்கலுக்கு 2.15 கோடி குடும்பத்தினருக்கு தலா 5,000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்க வேண்டும் என்று மதுரை மக்களின் சார்பில் கோரிக்கையாக வைக்கிறோம்.
Recommended Video

உதயநிதி
இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி தமிழக மக்களின் கோரிக்கையாக ஏற்று நிறைவேற்றி தரவேண்டும்... மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுங்கள் எங்களை அடிக்கடி போராட தூண்டாதீர்கள். அதிமுக மக்கள் விரும்பும் கட்சி. மக்களுக்காகவே எப்போதும் போராடும்... எனவே வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை ஒட்டுமொத்த மக்களும் ஆதரிப்பார்கள்" என்றார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications