கடிதத்திற்கு கை மேல் பலன்! மதுரை மாணவனுக்கு நீதி கிடைத்தது! தேர்வு மையம் லட்சத்தீவிலிருந்து மாற்றம்!
மதுரை: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்த மதுரை மாணவனுக்கு லட்சத்தீவில் நுழைவுத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் சு.வெங்கடேசன் எம்.பி.மேற்கொண்ட முயற்சியால் தேர்வு மையம் மதுரைக்கே மாற்றப்பட்டுள்ளது.
இதனை நீதி கிடைத்ததாக குறிப்பிட்டுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தேசிய தேர்வு முகமையின் ஒருங்கிணைப்பாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

வெங்கடேசன் எம்.பி கடிதம்
மத்தியப் பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர மதுரையை சேர்ந்த மானவன் லோகேஷ்வர் விண்ணப்பித்திருந்தார். தேர்வு மையத்திற்கான அனுமதி சீட்டு இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்துள்ளது. தனக்கு வந்த கடிதத்தை பிரித்துப் பார்த்தால் தேர்வு மையம் லட்சத்தீவில் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி காத்திருந்தது.

கை மேல் பலன்
இதையடுத்து மாணவன் லோகேஷ்வரின் தந்தை தந்தை பதறிப் போய் நேரடியாக சு.வெங்கடேசன் எம்.பியை நாடி நடந்த விவரத்தை கூறினார். அவரை பதற்றம் அடைய வேண்டாம் என ஆசுவாசப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி. மத்திய அரசுக்கு தாமதிக்காமல் கடிதம் எழுதியதோடு பேச வேண்டிய இடத்தில் தாமதிமின்றி பேசினார். அவரது முயற்சிக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது.

முன் மாதிரி எம்.பி.
ஆம், மாணவன் லோகேஷ்வருக்கு லட்சத்தீவில் இருந்து சொந்த ஊரான மதுரையிலேயே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மட்டும் இந்த விவகாரத்தில் சற்று கவனக் குறைவாகவோ மெத்தனமாகவோ இருந்திருந்தால் பரிதாபமாக நுழைவுத் தேர்வே எழுத முடியாத நிலை மாணவர் லோகேஷ்வருக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால் தனது துரித நடவடிக்கையால் அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறார் சு.வெங்கடேசன் எம்.பி.

நன்றி நன்றி
ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளும் இவரை போல் இருந்துவிட்டால் சாமானியர்களுக்கான உரிமை நிலைநாட்டப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இது தொடர்பாக டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ள சு.வெங்கடேசன் எம்.பி. நீதி கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளதுடன்,தேசிய தேர்வு முகமையின் ஒருங்கிணைப்பாளருக்கும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications