எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் காலமானார்! மர்ம தேசம், விடாது கருப்பு தொடர்களை எழுதியவர்!
மதுரை: பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 66.
மதுரை டிவிஎஸ் காலனியில் வசித்து வந்த இந்திரா சௌந்தரராஜன் மர்மதேசம், விடாது கருப்பு, ரகசியம், சொர்ண ரேகை, அத்திப்பூக்கள் போன்ற டிவி தொடர்கள் நாவல்கள், சிறுகதைகள், படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். ஆனந்தபுரத்து வீடு என்ற திரைப்படத்திலும் இந்திரா சௌந்தரராஜன் பணியாற்றியுள்ளார்.

இவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் அவர் குளியலறைக்கு சென்ற போது வழுக்கி விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயமடைந்தது. உடனடியாக உறவினர்கள் அவரை சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மறைந்தார். இவருடைய மரணத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவர் ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், தொலைகாட்சி தொடர்களை எழுதியுள்ளார். இன்றைய தினம் நடிகர் டெல்லி கணேஷ் மறைந்த அதிர்ச்சியிலிருந்த மீள்வதற்குள் இந்திரா சௌந்தரராஜனின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
700 சிறுகதைகள், 340 நாவல்களையும் எழுதிய இந்திரா சௌந்தரராஜன், 105 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். இவர் நவம்பர் 13 ஆம் தேதி 1958 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்டவர். இவருடைய கதைகள் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலும் எழுதப்பட்டிருந்தன.
இவர் எழுதிய என் பெயர் ரங்கநாயகி எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் 3ஆவது பரிசு பெற்றது. சிருங்காரம் என்ற படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது. ருத்ரம் தொலைக்காட்சித் தொடருக்காக தமிழக அரசின் விருது பெற்றார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications