முதலீட்டாளர்கள் மாநாட்டை விடுங்க.. மதுரைக்கு கிடைத்த சூப்பர் செய்தி.. ஒருவழியாக நல்லது நடந்துடுச்சே!
சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு மதுரைக்கு சாதகமாக செல்லாத நிலையில் மதுரைக்கு ஒரே ஒரு நல்ல செய்தி தற்போது கிடைத்துள்ளது.
சமீபத்தில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் பின் வரும் முதலீடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளாக குவிந்து வருகின்றன.

வேலைவாய்ப்புகள்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இரண்டு நாட்களில் மட்டும் 4 இலட்சம் நேரடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. மொத்தமாக இந்த மாநாட்டில் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்யப்பட்டு உள்ளன.
டாடா - 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு
வின்பாஸ்ட் - 16,000 கோடி ரூபாய் முதலீடு 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு
ஜே.எஸ்.டபிள்யூ - ரூ.12,000 கோடி ரூபாய் முதலீடு 6,600 பேருக்கு வேலைவாய்ப்பு
பர்ஸ்ட் சோலார்- 8,100 கோடி ரூபாய் முதலீடு 1.100 பேருக்கு வேலைவாய்ப்பு
TVS - 5,000 கோடி ரூபாய் முதலீடு 500 பேருக்கு வேலைவாய்ப்பு
பெகட்ரான் - 1,000 கோடி ரூபாய் முதலீடு 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு
மிட்சுபிஷி - ரூ.200 கோடி ரூபாய் முதலீடு 50 பேருக்கு வேலைவாய்ப்பு
கோத்ரெஜ்- 515 கோடி ரூபாய் முதலீடு 446 பேருக்கு வேலைவாய்ப்பு
Qualcomm - 177 கோடி ரூபாய் முதலீடு 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு
ஹூண்டாய் - 1,180 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.
கவனம்: இந்த மாநாட்டில் அதிகம் கவனிக்கப்பட்டது தூத்துக்குடி, சென்னை, கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள். இங்குதான் அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால் மதுரையில் பெரிதாக முதலீடுகள் செய்யப்படவில்லை.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மதுரைக்கு என்று சிறப்பு முதலீடுகள் எதுவும் வராதது கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. சிப்காட், ஐடி துறையில் முதலீடுகள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை எம்எஸ்எம்இ துறையில் கூட முதலீடுகள் வராததுதான் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.
மதுரைக்கு என்று சர்வதேச விமான நிலையம் இல்லை, அங்கே துறைமுகம் கொண்டு வர முடியாது என்பதால் பெரும்பாலும் பலரும் தூத்துக்குடி பக்கம் செல்வதே விவாதங்களை சந்தித்துள்ளது. கடந்த 2 நாட்களாக மதுரை மக்கள் இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
மதுரைக்கு குட் நியூஸ்: அதன்படி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து கோலாலம்பூருக்கு மார்ச் 31-ம் 2024 முதல் புதிய அட்டவணை அடிப்படையில் விமானத்தை இயக்க முன்வந்துள்ளது. அதாவது கூடுதல் விமானம் இனி கோலாலம்பூருக்கு இயக்கப்படும் .
24/7 ஏர்லைன்ஸ் அட்டவணையின் அடிப்படையில் அதிக விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளனர். டெர்மினல் கட்டிடத்தின் நெரிசலைக் குறைக்க அங்கே கட்டிடம் மறுகட்டமைக்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் இங்கே வெளிநாட்டு விமானங்கள் இயங்கும்.
மதுரைக்கு என்று சர்வதேச விமான நிலையம் இல்லை. இருந்தாலும் தற்காலிகமாக உள்ளூர் விமான நிலையம்ச சர்வதேச விமான சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் மதுரைக்கு நல்ல செய்தியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications