ஜெயலலிதா ரூட்டை கையிலெடுத்த எடப்பாடி.. ஒன்னுமே செய்ய முடியாது! அடித்துச் சொல்லும் ஆர்பி உதயகுமார்..!

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல சக்திகள் இன்றைக்கு முயற்சிகள் எடுத்தாலும் மக்கள் ஒருபோதும் அதிமுகவை கைவிட மாட்டார்கள் எனவும், சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று முதலமைச்சர் கூறுவது பகல் கனவு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," 52 ஆண்டுகள் மிகப்பெரிய வரலாறு கொண்ட மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கம். முதல்ஆளாக நின்று மக்கள் தொண்டாற்றிய இயக்கம் என்றால் அது அனைத்திந்திய அண்ணாதிராவிட கழகம் ஆகும்.

RB Udayakumar Mk Stalin DMK admk

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சாதகமாக நடைபெறாது என்று புறக்கணித்த காரணத்தை கழகப் பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக அறிக்கையில் கூறியுள்ளார். நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 21சதவீதம் வாக்குகளை பெற்று தனது செல்வாக்கை நிலைநிறுத்தி காட்டியுள்ளார்.

விக்ரவாண்டி தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறாது என்ற அடிப்படையில் அதற்கு ஈரோடு கிழக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது என்று எடப்பாடியார் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். கடந்த ஈரோடு இடைத் தேர்தலில் திமுக கையாண்ட முறை வாக்காளர்களை ஆடு, மாடுகளை போல பட்டியில் அடைத்து வைத்து அவர்கள் கையாண்ட முறையை தேர்தல் ஆணையத்திலே பலமுறை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.

ஆகவே திமுக தானாகவே வெற்றி என்று அறிவித்து விடக் கூடிய ஒரு சூழ்நிலையிலே ஒட்டுமொத்த அதிகாரம் பலம், பணபலம், படைபலம் அத்தனையும் கடந்த ஈரோடு கிழக்கு, திருமங்கலம் பார்முலா இதுபோன்ற திமுகவுக்கு அந்த வரலாறு உண்டு அதையும் இங்கே மீண்டும் விக்கிரவாண்டி தேர்தலிலும் செயல்படுத்துவார்கள் அதை மக்களுக்கு எடப்பாடியார் சொல்லி இருக்கிறார். இந்த தேர்தலால் எந்த மாற்றம் ஏற்படாது. ஆனால் ஒரு பிரதான எதிர்க்கட்சி ஏன் புறக்கணிக்கிறது என்று மக்கள் விவாதிக்கிற போது இப்போது திமுக தேர்தலை அணுகுகிற படைபலம், பணபலம் அதிகார பலம் என்பதை தெளிவாக சொல்லி உள்ளார்.

கடந்த 2009 ஆண்டில் ஜெயலலிதா இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட ஐந்து தொகுதி இடைத்தேர்தலிலும், அதே ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து ,2011ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, திமுகவை எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலையை உருவாக்கினார். அன்றைக்கு கேப்டன் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார் அந்த அளவிற்கு அளவுக்கு மக்கள் தீர்ப்பளித்தார். தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கக்கூடிய அந்த வரலாற்று வாய்ப்பை தமிழக மக்கள் தந்தார்கள்.

மக்களை சுதந்திரமாக வாக்களிப்பதற்கு தடையாக திமுக அரசு தேர்தல் ஆணையத்தினுடைய கட்டுப்பாடுகளை மீறி, வரம்பு மீறி செயல்படுவார்கள் என்கிற செய்தியை மக்களுக்கு சொல்லுகிற முடிவை அறிவித்த உடனே எங்க கூட்டணில் இருக்குற தேமுதிகவும் புறக்கணித்தார்கள். ஆகவே பொது எதிரியான திமுக அவங்கள் கையாளுங்குற அந்த முறையே எதிர்த்து எல்லோரும் புறக்கணித்தோம் என்று சொன்னால், திமுகவை மக்களால் வெறுக்கப்படுகிற, மக்களால் ஒதுக்கப்படுகிற ,மக்களால் அங்கீகரிக்கப்படாத ஒரு நிலை மக்களிடத்திலே நாம் சுட்டிக்காட்டாகவே இது ஒரு வாய்ப்பு எல்லாருக்கும் இருக்கும். இதை எல்லா கட்சிகளும் செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இடைத்தேர்தலில் திமுக கையாளுகிற அந்த முறை என்பது சுதந்திரமாக ,நியாயமாக நடைபெறாது என்பதை மக்களுக்கு எப்படி சொல்வது ஏற்கனவே தேர்தல் ஆணையத்திலேயே நாம் முறையிட்டு எந்தவித நடவடிக்கையும் இல்லை இதைதான் புரட்சித்தலைவி அம்மா செய்தார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதியை வெல்லுவோம், அதிமுக தொகுதியை கூட வெல்வோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசி இருப்பது அவர்கள் தொண்டர்களை ஊக்கப்படுத்த தான் பேசி உள்ளார்.

அது பகல் கனவு ,அது நிச்சயமாக ஒரு நாளும் மக்கள் திமுகவுக்கு அதுபோன்ற ஒரு ஆதரவு நிலையை எடுப்பதற்கு வாய்ப்பே இல்லை. கடந்த 2019 ஆண்டு திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது 33 சதவீதம் வாக்கு வங்கி பெற்றது என்று சொன்னால், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது நாடாளுமன்ற தேர்தலில் 26 சதவீதம் பெற்றுள்ளது.

அதிமுக கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு சதவீதம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது இந்த தேர்தலில் 20 சதவீதம் மேற்பட்ட வாக்கு வங்கி அதிமுக பெற்றுள்ளது.அதேபோல் பிஜேபி 11 சதவீதம், நாம் தமிழர் 8 சதவீதம் என்று திமுகவிற்கு எதிராக 39 சதவீதம் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.ஆனால் இந்த தேர்தலிலே திமுக எண்ணிக்கை தொட்டு இருக்கலாம் ஆனால் மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறது என்பது இந்த புள்ளி விவரங்கள் நமக்கு துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது.

52 ஆண்டுகளாக சேவை செய்து வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல சக்திகள் இன்றைக்கு முயற்சிகள் எடுத்தாலும் கூட, அந்த முயற்சிகளை எல்லாம் முறியடித்து மன உறுதியோடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இன்றைக்கு அம்மாவின் வழியிலே மீட்டெடுத்து ஒரு ஜனநாயக இயக்கமாக, சுதந்திர இயக்கமாக கடைக்கோடி ஏழை எளிய சாமானிய தொண்டர்களின் இயக்கமாக எடப்பாடியார் வழிநடத்தி வருகின்றார். எடப்பாடி பழனிசாமியை 2026ல் முதலமைச்சராக அமர்த்துவது தான் 2 கோடி தொண்டர்களுடைய லட்சியமாக இருக்கிறது மக்களும் அப்படித்தான் தீர்மானமாக முடிவெடுத்து இருக்கின்றார்கள். " என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+