பிரதமர் மோடிக்கு நன்றி.. 'அன்பிட் அமைச்சர்'! திடீரென அன்பில் மகேஷை வம்புக்கு இழுத்த செல்லூர் ராஜு!
மதுரை : உதயநிதி குடும்பத்தோடும் கலைஞர் குடும்பத்தோடும் பின்னிப்பிணைந்து உள்ள பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அந்த துறைக்கு அன்பிட் அமைச்சராக உள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
Recommended Video
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா முழு உருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

செல்லூர் ராஜூ
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில்," நாட்டு மக்கள் அனைவரும் தேசிய கொடியை ஏற்றி வைக்கும் பாக்கியத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார். சாதாரண குடிமகனும் தேசியக்கொடி ஏற்றி வைக்கும் அரும்பாக்கியத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி உள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் தேசிய உணர்வும் தேசப்பற்றும் தியாகிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி.

தேசிய கொடி
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தென்பாண்டி மண்டலம் மிகப்பெரிய தியாகத்தை செய்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் மதுரையைச் சேர்ந்தவர்கள் அதிகமாக பங்கெடுத்துள்ளனர்குறிப்பாக மதுரை சார்ந்த லட்சுமி காந்த பாரதி அவருடைய சுதந்திரப் போராட்ட வரலாற்றை கேட்டாலே உடல் புல்லரிக்கிறது. இளைய சமுதாயத்திற்கு தேசியத்தையும் தேசப்பற்றையும் ஊட்டுகின்ற அரும்பாக்கியமாக தேசியக்கொடி ஏற்றும் வாய்ப்பை பிரதமர் கொடுத்துள்ளார்.

ஸ்டாலினின் செல்வாக்கு
திமுக தலைவர் ஸ்டாலினின் செல்வாக்கு சரிந்து விட்டது. இன்றைக்கு தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் மயமாகவே உள்ளது. பெரியவர்கள்,மாணவர்கள் மட்டுமே போதைக்கு அடிமையாக இருந்த நிலையில் தற்போது மாணவிகளும் போதையில் சுற்றும் நிலை உள்ளது. போதைப்பொருளை ஒழிக்க சர்வாதிகாரியாக மாறுவேன் என ஸ்டாலின் சொல்வதெல்லாம் வெறும் விளம்பரம் தான். சர்வாதிகாரியாக மாறுவேன் என ஒரு முதலமைச்சர் சொல்வது தவறு.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அதிமுகவை யாராலும் மிரட்ட முடியாது. எவனாலும் அசைக்க முடியாது. அதிமுக எழுச்சியை தடுக்க முடியாது. காவல்துறை சரியாக செயல்படவில்லை. அதிகாரிகளின் செயல்பாடுகளை கைகளை கட்டிப்போட்டுள்ளார். மாணவி இறந்து அந்த இடத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் போகவில்லை. உதயநிதி குடும்பத்தோடும், கலைஞர் குடும்பத்தோடும் பின்னிப்பிணைந்து உள்ள பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் அந்த துறைக்கு அன்பிட் அமைச்சர் ஆக உள்ளார்.












Click it and Unblock the Notifications