பட்டப்பகலில் இளைஞரை ஓட ஓட விரட்டிய மர்ம கும்பல்.. தலையை துண்டித்ததால் மதுரையில் ஷாக்!
மதுரை: மதுரை மாவட்டம் ஊத்தங்குடியில் இளைஞர் ஒருவரை பட்டப்பகலில் மர்மகும்பல் ஒன்று தலையை துண்டாக வெட்டியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊத்தங்குடி சோலையப்பன் நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (22). இவர் நேற்று மாலை செயின்ட் மேரிஸ் சர்ச் வழியாக நண்பர் முனியசாமியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் அவர்கள் இருவரையும் வழிமறித்தது.

அவர்களை பார்த்தவுடன் இருவரும் ஓடத் தொடங்கினர். பின்னர் அந்த கும்பல் முருகானந்தத்தை விரட்டி பிடித்தது. அவரை கடுமையாக தாக்கி தலையை துண்டித்தது. அவரது தலையை தேவாலயத்தின் வாசலில் வைத்து விட்டு அந்த கும்பல் சென்றுவிட்டது.
இந்த நிலையில் காயமடைந்த முனியசாமி அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர்.
கொலை நடந்த நேரம் பட்டப்பகல் என்பதால் ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதி என்பதாலும் இந்த கொலையை பார்த்த மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதனிடையே பைபாஸ் சாலையில் கூர்மையான ஆயுதங்களுடன் கார் ஒன்று கிடப்பதை போலீஸார் கண்டறிந்தார்கள். அது கொலையாளிகளின் வாகனமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
முருகானந்தத்தை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து துப்பு கிடைக்கவில்லை. தனிப்படை அமைத்து கொலையாளியை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கீரத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications