உலக தமிழர்களுக்கு பெருமை சேர்க்க துரோகிகளுக்கு எதிராக வாக்களியுங்கள்... டிடிவி தினகரன் பேச்சு
மதுரை: துரோகிகளுக்கு எதிராக மதுரை மக்கள் வாக்களித்து உலக தமிழர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை டெபாசிட் இழக்கச் செய்வோம் என்றும் கூறியுள்ளார்.
தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் என்றைக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் என்றும் டிடிவி தினகரன் பதிலளித்தார். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது மக்களிடம் கேட்டதை தான் இப்போதும் கேட்கிறேன் என்றும், பழனிசாமி - பன்னீர்செல்வத்தின் துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை அமைப்பதற்கு என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் எனவும் பேசினார்.

ஆட்சி அமைப்பது தி.மு.க.வின் ஆசையாக இருக்கலாம். ஆனால், அவர்களின் கனவு நிறைவேறுவதற்கு வாய்ப்பே கிடையாது. ரகசிய கூட்டுக்கு வாய்பே இல்லை என்பதற்கு தான் இதனை சொல்வதாகவும் தெரிவித்தார்.
வாக்குக்கு பணம் கொடுப்பதாலேயே மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்ற சரித்திரம் இதுவரை கிடையாது. இனிமேலும் வாக்களிக்க மாட்டார்கள் என்று பேசிய டிடிவி தினகரன் எந்த மதத்தை சேர்ந்தவர்களையும் புண்படுத்துவதுப்போல யார் பேசினாலும் அது தவறு என்றார்.
முன்னதாக, இளைஞர் பட்டாளம் திமுக வில் இல்லை என்றும், வயது முதிர்ந்தவர்களின் இயக்கமாக தி.மு.க. ஆகி விட்டது என்றும் டிடிவி தினகரன் விமர்சனம் செய்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications