Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடைபெறுகிறது பல வருட மதுரை டிராபிக்! நாளை ஸ்டாலின் திறக்கும் மெகா மேம்பாலம்.. ஒரு சர்ப்ரைஸ் இருக்கு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை நகரின் நீண்ட நாள் போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், மதுரை - தொண்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேலமடை மேம்பாலம் நாளை, டிசம்பர் 7ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறது. இந்த மேம்பாலத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் மதுரையில் நடைபெறும் விழாவில் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். இதற்காக இன்றைய தினம் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார் ஸ்டாலின்.

தென் மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் மதுரை சுற்றுச்சாலையை கடந்து நகருக்குள் நுழையும்போது, குறிப்பாக தொண்டி சாலை மற்றும் கோரிப்பாளையம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

Madurai Flyover stalin

பஸ்கள், சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்துமே அங்கு பல மணிநேரங்கள் நின்று செல்ல வேண்டிய நிலைமை இருந்தது.. இதனால் ஏகப்பட்ட நெரிசலும் ஏற்பட்டது..

இந்த நெரிசலை குறைக்கும் நோக்கில்தான், கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் மதுரையில் புதிய மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்படும் என்று நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

மதுரை டிராபிக்குக்கு தீர்வு

அதன்படி, 2023 அக்டோபர் 30ல், மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலை மற்றும் கோரிப்பாளையம் சந்திப்பில் புதிய மேம்பாலங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தொண்டி சாலையில் உள்ள ஆட்சியர் அலுவலகம், ஆவின் சந்திப்பு மற்றும் அப்பல்லோ சந்திப்பு பகுதிகளில் இருந்த போக்குவரத்து சிக்னல்கள் அகற்றப்பட்டு, ரவுண்டானாவுடன் கூடிய மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த மேம்பாலம் 30 தூண்களுடன், சுமார் 1,100 மீட்டர் நீளமும், 17.2 மீட்டர் அகலமும் கொண்டு நான்கு வழிச்சாலையாக ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இப்போது மொத்த பணிகளும் முடிவடைந்து விட்டன.. .

மேம்பாலத்திற்கு வண்ணம் பூசும் பணிகள், மின் விளக்குகள் பொருத்துதல், அணுகுசாலைகள் அமைத்தல், தார்சாலை பணி ஆகியவைம் நிறைவு பெற்றுவிட்டன.. அதுமட்டுமல்ல, மேம்பாலத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன்களில் செடிகள் நடுவதற்கான மூன்று வடிவமைப்பு வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

நாளை திறக்கப்படும் மேம்பாலம்

இதற்கிடையில், ஆவின் சந்திப்பு மற்றும் அண்ணா பேருந்து நிலையம் சந்திப்பிலும் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவையும் தற்போது முடிவடைந்துள்ளன. இதனால், இந்த பகுதியின் மொத்த போக்குவரத்து இயக்கம் மேலும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பல்லோ சந்திப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நான்கு வழிச்சாலை மேம்பாலம் 2.1 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்தில் அமைந்துள்ளது. ரூ.150 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த கட்டமைப்பு, தற்போது விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட இறுதிக் கட்ட பணிகளும் ஜரூராய் நடந்து முடித்துவிட்டது.

இதையடுத்து, நாளை அதாவது டிசம்பர் 7ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலன்கள் - பயன்கள்

இந்த மேம்பாலம் திறக்கப்படுவதன் மூலம் பஸ்கள், லாரிகள், தனியார் வாகனங்கள், தினசரி பயணிகள் அனைவரது பயண நேரமும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.. குறிப்பாக அப்பல்லோ சந்திப்பு பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த கடும் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும் என்று தெரிகிறது.

அந்தவகையில், இந்த பிரம்மாண்டப் பாலம், தென் மாவட்டங்களில் இருந்து மதுரைக்குள் நுழையும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு மிகப்பெரிய நிம்மதியைத் தரப் போகிறது.
இந்த மேம்பாலத்தை நாளைய தினம் முதல்வர் திறந்து வைக்கிறார்..

திருப்பரங்குன்றம் பரபரப்பு

கடந்த 4 நாட்களாகவே திருப்பரங்குன்றம் விவகாரம் தீயாய் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.. மதுரை ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீலுக்கு போயுள்ளது.. மதுரை உயர் நீதிமன்றத்திலும் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு மதுரை செல்கிறார்.

நாளை இந்த மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்... மேலும், அங்கு நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மதுரை திமுகவினரும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+