கிராம நத்தம் நிலம்.. ஆதி திராவிடருக்கு இலவச வீட்டுமனை பட்டா.. வருவாய் துறைக்கு தமிழக அரசின் அதிரடி
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா அரசால் வழங்கப்பட்டு வருகிறது... இது தொடர்பாக எண்ணற்ற வழக்குகளை தமிழக நீதிமன்றங்கள் நடத்தியிருக்கின்றன.

பட்டாக்கள்: குறிப்பாக, கடந்த 1998-ம் ஆண்டு ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த வீடுகள் இல்லாத 91 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் அரசால் வழங்கப்பட்டன.
அப்படி தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களில் இதுவரை யாரும் வீடுகள் கட்டாததால், இலவச வீட்டு மனைகளை திரும்ப பெற்று அரசின் நல திட்டங்களுக்கு பயன்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நாராயணசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தனி நீதிபதி உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, "இலவசமாக கொடுக்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை திரும்ப பெற உத்தரவிட முடியாது" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தொடரப்பட்டது.
இது தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, "பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு வீடுகள் கட்டாமல் இருக்கலாம், அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவே இலவச மனை பட்டா வழங்கப்பட்டது. பட்டாவை திரும்ப பெற்றால் அரசின் நோக்கம் பாதிக்கப்படும். ஆதி திராவிடர்களுக்கு அரசு நிலம் ஒதுக்கியதால் மனுதாரர் பாதிக்கப்படவில்லை. தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை" என்று தெரிவித்த நீதிபதிகள் அந்த வழக்கை தள்ளுபடி செய்திருந்தனர்.
வீட்டு மனைகள்: அதற்காக ஒவ்வொரு தாலுகாவிலும் வருவாய் அலுவலர்கள் இடம்பெற்ற குழு அமைக்கும்படியும், அந்த குழு வீட்டுமனைகளை 100 சதவீதம் கள ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.. இதற்கான சுற்றறிக்கையை வருவாய் கோட்டாட்சியர்கள், அனைத்து தாசில்தார்களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள்.
இந்த பணியில் தாசில்தார்கள், 50 சதவீதம் ஆய்வு செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் நல அலுவலரான தனி தாசில்தார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனி தாசில்தார் ஆகியோர் மீதியுள்ள 50 சதவீத ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு விஏஓக்கள், வருவாய் ஆய்வாளர்கள், மண்டல துணை தாசில்தார்கள் ஆகியோரைக் கொண்டதாக குழு அமைக்கப்பட வேண்டும்" என்றும் உத்தரவிட்டுள்ளார்.
நத்தம் மனைகள்: மதுரை வருவாய் கோட்டத்தில், ஆதிதிராவிடர் நத்தத்தில் 618 காலிமனைகள், பிற்படுத்தப்பட்டோர் நத்தத்தில் 40 காலிமனைகள் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருப்பதால், இதனை மீண்டும் ஆய்வு செய்து வழங்க உள்ளனர். இதுபற்றி கடந்த செப்டம்பர் 9ம் தேதி, மதுரையில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை செய்துள்ளனர். அதனடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications