பரவும் வட இந்திய கலாசாரம்- மதுரையில் தமிழக பாஜக இளைஞரணி தலைவருக்கு பரிசாக துப்பாக்கி
மதுரை: மதுரையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வத்துக்கு பரிசாக துப்பாக்கி ( ஏர்கன்) கொடுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையாகி உள்ளது.
வட இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சியில் திரிசூலம், துப்பாக்கி போன்றவை தலைவர்களுக்கு பரிசாக கொடுப்பர். அதை கையில் ஏந்தியபடி தலைவர்களும் போஸ் கொடுப்பது வழக்கம்.

தமிழகத்தில் பொதுவாக அரசியல் நிகழ்ச்சிகளில் வீரவாள் வழங்குவது வழக்கம். தற்போது வட இந்தியா பாணியில் மதுரையில் துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது.
மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இளம் தாமரை ராணுவ படை அறிமுகம், இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் பங்கேற்றார். அவருக்கு இந்த நிகழ்ச்சியில் துப்பாக்கி (ஏர்கன்) ஒன்று பரிசாக கொடுக்கப்பட்டது.
வினோஜ் பி செல்வமும் இந்த துப்பாக்கியை வட இந்தியா தலைவர்களைப் போல தூக்கிபிடித்தபடி போஸ் கொடுத்தார். சமூக வலைதளங்களில் இந்த படம் தற்போது வைரலாகி வருகிறது.
துப்பாக்கியை பரிசாகக் கொடுத்தவர் ஏர்கன் தயாரிப்பு உரிமம் பெற்றவராக சொல்லப்படும் பாஜக மண்டல தலைவரான தேவகிரி சல்கா என்கின்றனர் பாரதிய ஜனதா கட்சியினர்.












Click it and Unblock the Notifications