கிளிகளை வீட்டில் வளர்க்காதீர்கள்.. உடனே ஒப்படையுங்கள்.. மதுரையில் வனத்துறையினர் உத்தரவு
மதுரை: வீடுகளில் கிளிகள் வளர்க்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வருகின்ற ஜூலை 17 ஆம் தேதிக்குள் கிளிகளை மதுரை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வீடு வீடாக வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கிளிகளை பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022 இன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கிளிகளை வீடுகளில் வளர்ப்பதற்காக விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

மதுரை மாநகர் பகுதியான செல்லூர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் வீடுகளில் ஏராளமான கிளிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வளர்க்கப்படும் கிளிகள் துன்புறுத்தப்படுவதாகவும், கிளிகளுக்கு ஒவ்வாத உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கிளிகளை வளர்ப்பவர் கிளிகளின் இறக்கைகளை வெட்டுதல், கிளிகளை காயப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் வனத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து செல்லூர் பகுதியிலும் நரிமேடு பகுதியிலும் வனத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த 100க்கும் மேற்பட்ட கிளிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபோன்று வீட்டில் கிளி வளர்ப்பு செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிளிகள் வளர்க்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வருகின்ற ஜூலை 17 ஆம் தேதிக்குள் கிளிகளை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால அவகாசத்தை மீறி கிளிகளை வீடுகளில் வளர்க்கும்பட்சத்தில் வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வனத்துறை சார்பாக துண்டு பிரசாரங்கள் மற்றும் ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications