பழனி கோயிலில் ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக நகராட்சியே போராட்டமா? நீதிபதிகள் அதிருப்தி.. அதிரடி உத்தரவு
மதுரை: பழனி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதற்கு எதிராக பழனி நகராட்சி கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது. இதனால் அதிருப்தி அடைந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், போராட்டம் நடத்தியது உணமையா என்று விசாரிக்கும்படி திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.
கிரிவலப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகளை நீதிமன்றம் உத்தரவிட்டும் அகற்றவில்லை என திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அவமதிப்பு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கிரிவலப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. இதனால் வழிபட வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதனை அதிகாரிகள் முறையாக நிறைவேற்றவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, பழனி கிரிவலப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பஸ் வசதி உள்ளிட்டவைகளை செய்து தரும்படி சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் கிரிவலப்பாதையில் 152 ஆக்கிரமிப்பு வீடுகள், வணிக கட்டிடங்கள் போன்றவை இடித்து அகற்றப்பட்டன. இந்த நடவடிக்கைகள் குறித்து பழனி நகராட்சி கமிஷனர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் ராதாகிருஷ்ணன், நீதிபதிகள் முன்பாக நேரில் ஆஜராகி கூறுகையில் “உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்பேரில் பழனி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. தற்போது பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பழனி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. மேலும் ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைக்கு எதிராக பழனி கோவில் தேவஸ்தான அலுவலகம் முன்பு நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்” என தெரிவித்தார்.
இதை கேட்டு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பழனி கிரிவலப்பாதை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிர்த்து தேவசம்போர்டு அலுவலகம் முன்பு நகராட்சி அலுவலகப் பணியாளர்கள், தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தியது இந்த நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி எடுத்த நடவடிக்கை குறித்து பழனி நகராட்சி கமிஷனர் இந்த நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதை நகராட்சி அலுவலக அதிகாரிகள், கவுன்சிலர்கள் நிச்சயம் அறிந்து இருப்பார்கள். அப்படி இருந்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல். மேலும் இது, கிரிவலப்பாதை ஆக்கிரமிப்பு விவகாரத்தை கோர்ட்டு உன்னிப்பாக கவனிப்பதற்கு தடை ஏற்படுத்துவது போல உள்ளது. எனவே இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் முறையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதொடர்பாக இந்த நீதிமன்றத்தில் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications