“என் தீர்ப்புகள் சாதிய ரீதியில் உள்ளதா?” வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கேள்வி!
மதுரை: ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
"எனது தீர்ப்புகள் சாதிய ரீதியில் உள்ளதாக இன்னும் விமர்சிக்கிறீர்களா?" என வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் திடீரென நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வருகிறார். சமூக பிரச்சனைகள், கூடங்குளம் அணு உலை, மனித உரிமை மீறல், காவல் நிலைய மரணங்கள், அனைத்து சாதியினர் அர்ச்சகர் நியமனம், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.
தனது கோரிக்கை தொடர்பான பல்வேறு போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளார். ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் ஆகியோரது அமர்வில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் வாஞ்சிநாதன் ஆஜராகி வந்தார். தற்போது வேறொரு வழக்கறிஞர் ஆஜராகி வருகிறார். இந்த வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் பிற்பகலில் வாஞ்சிநாதன் ஆஜரானார்.
அப்போது அவரிடம், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "உங்களது நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தொடர்ந்து நீதித்துறையை அவதுாறு செய்து வருகிறீர்கள். சமூக ஊடகங்களில் உங்களது வீடியோக்கள் நிறைந்துள்ளன. தீர்ப்புகளை விமர்சிப்பது ஒன்று. ஆனால் நீதிபதிகளின் மீது குறை கூறுவது முற்றிலும் வேறு விஷயம்.
நீதிமன்ற தீர்ப்புகளை நாட்டின் எந்தவொரு குடிமகனும் விமர்சிக்க முடியும் என்பதில் சந்தேகமும் இல்லை. இருப்பினும், நீதிபதியை குறைகூறவோ அல்லது நீதிபதியின் நல்லெண்ணத்தை கேள்விக்குள்ளாக்குவதோ அல்லது நீதிபதியின் திறன் குறித்து கேள்வி எழுப்பவோ உரிமை இல்லை. நீதிபதிகள் நீதி வழங்கும் அமைப்பின் ஒரு அங்கம். நீதிபதி மீதான அவதுாறான குற்றச்சாட்டுகளை கண்டுகொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது.
நீங்கள் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும், சாதிய ரீதியாக தீர்ப்புகள் வழங்குவதாகவும் என் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறீர்கள். இது குறித்து தங்களின் தற்போதைய நிலை என்ன? எனது தீர்ப்புகள் சாதிய ரீதியில் உள்ளதாக இன்னும் விமர்சிக்கிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதன், "குற்றச்சாட்டு எது என குறிப்பிட்டு கூறினால் பதிலளிக்கிறேன்" என கூறியுள்ளார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வரும் 28 ஆம் தேதி மதியம் 1.15 மணிக்கு இந்த நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும். அப்போது எழுத்துப்பூர்வமான கேள்விகள் வழங்கப்படும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications