மதுரை பகுதியில் வெளுத்து வாங்கிய மழை.. 4 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய மழையால் சாலைகளில் வெள்ளம்!
மதுரை : மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று மாலை முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் நேற்று மாலை முதல் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
மதுரையில் நேற்று மாலை ஆறு மணி அளவில் வெளுத்து வாங்கத் தொடங்கிய கனமழை 4 மணி நேரமாக தொடர்ந்தது.
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மதுரையில் வெளுத்து வாங்கிய மழை
மதுரையில் நேற்று மாலை 6 மணி அளவில் கருமேகம் சூழ்ந்து திடீரென மின்னல் இடி சத்தத்துடன் மழை வெளுத்து வாங்கத் தொடங்கியது. இதனால் மதுரை மாட்டுத்தாவணி, பெரியார் பஸ் ஸ்டாண்ட், கோரிப்பாளையம், விரகனூர், பொன்மேனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு
விளக்குத்தூண் பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி எடுக்க வந்த குடும்பத்தினர் மழையினால் ஒதுங்கி நிற்கின்றனர். ஏற்கனவே 2 நாட்களாக மழை பெய்ததில் மாட்டுத்தாவணி பகுதியில் கால்வாயில் தண்ணீர் செல்லாததால் மழைநீர் வீடுகளுக்குள் புகும் நிலையில், அங்கு கால்வாய் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மழையினால் பெரிய பாதிப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது.

சிவகங்கை, புதுக்கோட்டை
சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளிலும் மாலை முதல் நள்ளிரவு தாண்டியும் மழை தொடர்ந்து வருகிறது. அடித்துக் கொட்டிய மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு
வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனையடுத்து வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. நீர்வரத்து நேற்று 1,823 கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் வைகை அணை நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications