இடி மின்னலுடன் இரவில் கொட்டிய திடீர் மழை - மின்சாரம் துண்டிப்பால் விடிய விடிய இருளில் தவிப்பு
மதுரை மாவட்டத்தில் இரவு நேரத்தில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 10 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் மின்சாரம் இன்றி இருளில் தவித்தனர்.
மதுரை; தென்மேற்குப்பருவமழை தீவிரமடைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் இரவு நேரத்தில் இடியும் மின்னலுமாய் கனமழை கொட்டியது. காற்றுடன் பெய்தமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பத்துமணிநேரத்திற்கும் மேலாக மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
Recommended Video
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

தமிழகத்தில் கோவை, நீலகிரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை மையத்தின் நேற்றைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் கணித்தது போல மதுரை மாவட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் திடீரென இரவு நேரத்தில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இரவு 8 மணி முதல் 10 மணிவரை பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தே. கல்லுப்பட்டி, தே.குண்ணத்தூர் பகுதிகளில் இரவில் சென்ற மின்சாரம் விடிந்த பிறகும் வரவில்லை என்பதால் மக்கள் இருளில் தவிக்க நேரிட்டது.
சென்னை வானிலைமையத்தின் அறிவிப்பின் படி சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் நகரின் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும், மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வரும் 22ஆம் தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும், ஜூலை 20, 21 தேதிகளில் தென் மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications