அமைச்சரவையிலிருந்து மனோ தங்கராஜ் நீக்கம் ஏன்? வழக்கறிஞருக்கு வந்த சந்தேகத்தை பாருங்க!
மதுரை: பாஜகவினர் கொடுத்த அழுத்தத்தால்தான் மனோ தங்கராஜ் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது என மக்கள் உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அமைச்சரவை நேற்று மாற்றப்பட்டது. இதில் 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். 4 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர். சிலரது இலாகாக்கள் மாறின. மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமசந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களில் ராமசந்திரனுக்கு அரசு கொறடா பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு கொறடா பதவியை வகித்து வந்த கோவி செழியனுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்டது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றுதான்.
அவருடைய குடும்பத்தினர் தலையீடு இருந்ததாக பல முறை புகார் எழுந்தது. கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பலின் தலைவனுடன் அவர் கட்டி அணைத்து புகைப்படம் எடுத்தது பெரும் சர்ச்சையானது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தையே செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினர் கட்டுக்குள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இது சீனியர் அமைச்சர் பொன்முடிக்கு பெரும் தொல்லையாகவே இருந்தது. இதனால் திமுக நிர்வாகிகள் தரப்பு புகார் சொன்னதும் இல்லாமல் பொன்முடியும், செஞ்சி மஸ்தான் மீது புகார் கூறியதாக தெரிகிறது. இதனால்தான் அவர் நீக்கப்பட்டார்.
ஆனால் மனோ தங்கராஜை பொருத்தமட்டில் ஆவடி எம்எல்ஏ எஸ்.எம்.நாசருக்கு பதிலாக நியமிக்கப்பட்டார். அவருடைய மாற்றம் ஏன் என்ற கேள்வி எழுந்தது. ஆவின் பால் தட்டுப்பாடு, ஆவின் பாலில் கலப்படம் உள்ளிட்ட விவகாரங்களால்தான் இந்த நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் பாஜக கொடுத்த அழுத்தம்தான் மனோ தங்கராஜ் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: மனோ தங்கராஜை அமைச்சரவையில் இருந்து நீக்கியது முற்போக்காளர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
குமரி ஆர்எஸ்எஸ் மாடல் என்பதை விட திராவிட மாடலாக மாற்றியவர் மனோதான். மோடிக்கு எதிராக 108 கேள்விகள் என்ற புத்தகத்தை எழுதியவர். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடியவர். ஆவினில் ஊழலை ஒழித்தார். மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியிலும் விளவங்கோடு இடைத்தேர்தலிலும் காங்கிரஸை வெற்றி பெறச் செய்தவர்.
அவர் செய்த தவறு என்ன என்பதை முதல்வர் விளக்க வேண்டும். கன்னியாகுமரி, நெல்லை பகுதியில் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு அதானி துறைமுகத்திற்கு கொண்டு செல்வதை எதிர்த்து பெரும்பான்மையான குவாரிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தார்.
எனவே பாஜகவினரும் கனிமவள கொள்ளையர்கள் கொடுத்த அழுத்தத்தால்தான் மனோ தங்கராஜ் நீக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. ஆர்எஸ்எஸ், பாஜகவை எதிர்க்கும் கொள்கையாளர், சிறுபான்மையினரின் பிரதிநிதியாக இருப்பவரை நீக்குவதன் மூலம் மக்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறீர்கள்.
மதுரையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை டம்மியாக்கிவிட்டார்கள். தற்போது மனோ தங்கராஜும் நீக்கப்பட்டுவிட்டார். கொள்கை ரீதியாக இருப்போருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கக் கூடாது என திமுக விரும்புகிறதா, முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த பிறகே இது நடப்பதால் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன? நாடார் சமூகத்தின் பிரதிநிதித்துவம் தேவையில்லை என திமுக கருதுகிறதா?
பாஜகவோடு திமுக நெருக்கம் காட்டுவதாகவே தெரிகிறது. மனோ தங்கராஜை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க வேண்டும். கொள்கைவாதிகளை நீக்குவது குறித்து மூத்த அமைச்சர்கள், முற்போக்கு அமைப்பாளர்களான கி.வீரமணி, திருமாவளவன், வைகோ உள்ளிட்டோர் கேள்வி எழுப்ப வேண்டும் என வாஞ்சிநாதன் கேட்டுக் கொண்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications