ஆன்லைனில் ஒரு மார்க்.. ரிசல்டில் ஒரு மார்க்! நீட் விடைத்தாளை பார்க்க அனுமதி! மதுரை ஐகோர்ட் கிளை
மதுரை: நீட் தேர்வில் தனக்கு வழங்கப்பட்ட விடைத்தாள் மாறியுள்ளதாக மாணவி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்து உள்ளது
நாட்டில் உள்ள மருத்துவ இடங்கள் நீட் தேர்வு மூலமாகவே நிரப்பப்பட்டு வருகிறது. இதற்காக யுஜி மற்றும் பிஜி நீட் நுழைவுத் தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 17இல் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது.

வழக்கு
இதற்கிடையே நீட் தேர்வு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ஜெயசித்ரா என்ற மாணவி வழக்கு தொடர்ந்துள்ளார். நீட் தேர்வில் தனது விடைத்தாள் மாறி விட்டதாகக் கூறி இந்த மாணவி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார். நீட் தேர்வில் 720க்கு 500க்கு மேல் மதிப்பெண்கள் பெறுவோம் என நம்பிக்கையுடன் இருந்த நிலையில், 114 மதிப்பெண்கள் பெற்றதாக முடிவுகள் வந்துள்ளதாக வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இரு வேறு மதிப்பெண்கள்
இதன் காரணமாக விடைத்தாளை நேரில் பார்க்க அனுமதி தர வேண்டும் என்று மாணவி ஜெயசித்ரா வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் ஆன்லைனில் 564 மதிப்பெண்கள் காட்டுவதாகவும் ஆனால் தனக்கு வந்த தேர்வு முடிவில் 114 மதிப்பெண்களே உள்ளதாகவும் அந்த மாணவி தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நீட் தேர்வின் விடைத்தாளான ஓஎம்ஆர் சீட்டை நேரடியாகச் சென்று பார்க்க ஜெயசித்ராவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்பதால் மாணவி கோரிக்கை ஏற்கப்பட்டதாகவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்து உள்ளார்.

முதல்முறை இல்லை
முன்னதாக நீட் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாகச் சென்னையைச் சேர்ந்த மாணவியும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அதில் தேர்வில் 720க்கு 600க்கும் மேல் மதிப்பெண்கள் பெறும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் 132 மதிப்பெண்கள் பெற்றதற்கான விடைத்தாள் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார். எனவே விடைத்தாளில் உள்ள கைரேகையைச் சரி பார்த்தால் தனது விடைத்தாள் எது எனக் கண்டுபிடிக்க முடியும் என்றும் இதற்காக உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications