ரசாயனம் கலந்த விநாயகர் சிலை.. “எப்படி நடக்குது? உடனே சொல்லுங்க”.. ஐகோர்ட் கிளை பரபர ஆர்டர்!
மதுரை: ரசாயனம் கலந்த விநாயகர் சிலை செய்ய கரைக்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை பின்பற்றி சிலை செய்யப்படுகிறதா என கேள்வி எழுப்பி, அரசிடம் தகவல் பெற்று நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தற்போதே விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. விநாயகர் சதுர்த்தியன்று இந்து அமைப்பினர், பொதுமக்கள், விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு நீர்நிலைகளில் கரைப்பார்கள்.

இந்நிலையில், ரசாயனத்தால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் சரியாக கரைவதில்லை மற்றும் அதனால் மாசுபாடு ஏற்படுவதால், களிமண் சிலைகளை மட்டுமே செய்ய உத்தரவு அளிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் அரசுபாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்த நிலையில், விநாயகர் சிலைகளை ரசாயனம் பயன்படுத்தி செய்யக்கூடாது என பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு உள்ள நிலையில், எப்படி ரசாயனம் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
விநாயகர் சிலையை செய்வதற்கு, பசுமைத் தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் அரசு தரப்பில் தகவல் பெற்று நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications