Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மதுரை மாநகராட்சியை மொத்தமாக கலைக்க உத்தரவிட நேரிடும்”.. உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாநகராட்சியை கலைக்க உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து 3 கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்றால் மாநகராட்சி சட்ட விதிகளின்படி மதுரை மாநகராட்சியை கலைக்க உத்தரவிட நேரிடும் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை மாநகராட்சி மேயராக இருந்த இந்திராணி ராஜினாமா செய்து சுமார் 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இப்போது வரை புதிய மேயர் தேர்வு செய்யப்படவில்லை. மதுரை மாநகராட்சியில் நடந்த வரி மோசடி விவகாரம் சில மாதங்களுக்கு முன்பாக மிகப் பெரிய அளவில் வெடித்தது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள், கவுன்சிலரின் கணவர் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். விவகாரம் பெரிதான நிலையில் மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவர்கள் 2 பேரும் மண்டலத் தலைவர்கள் ஐந்து பேரும் ராஜினாமா செய்தனர்.

High Court Warns of Possible Dissolution of Madurai Corporation Over Meeting Lapses

அதன் பிறகு மதுரை மாநாகராட்சியின் மேயராக இருந்த இந்திராணியின் கணவர் பொன் வசந்த் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அக்டோபர் 9 ஆம் தேதி பொன் வசந்த் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, அக்டோபர் 15-ஆம் தேதி மாநகராட்சியின் மேயரான இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா அக்டோபர் 17 ஆம் தேதி மாமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா செய்து 3 மாதங்கள் ஆகியும் மதுரை மாநகராட்சியின் புதிய மேயராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை. மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 இடங்களில் 69 இடங்கள் திமுக. வசமே இருக்கும் நிலையிலும், சுமார் 3 மாதங்களாக புதிய மேயர் நியமிக்கப்படாதது விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மதுரையை சேர்ந்த டிஆர்.தேசிகாச்சாரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மாநகராட்சியின் மேயராக இருந்த இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய மேயராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்றும் அதனால் மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டங்கள் நடத்தப்படாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஜெயசந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மதுரை மாநகராட்சியில் மேயர் என யாரும் இல்லையெனில் மாதந்தோறும் துணை மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம் நடத்த வேண்டும் என்றனர். துணை மேயரும் இல்லை என்றால் யாராவது ஓர் உறுப்பினரை தலைவராக வைத்து கூட்டம் நடத்தலாம் என்றும் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து 3 மாதங்களுக்கு கூட்டங்கள் நடத்தவில்லை என்றால் மாநகராட்சியை கலைக்க வேண்டும் என்ற சட்டம் உள்ள நிலையில், கூட்டம் நடத்தப்படவில்லை என்றால் உறுப்பினர்களை கலைக்க உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் மேயர் பதவி விலகிய பிறகு சாதாரண கூட்டம் நடைபெற்றதா என்பது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+