இந்தியில் பேசு- நடிகர் சித்தார்த்தை சீண்டிய மதுரை CISF வீரர்-விசாரிக்க வெங்கடேசன் எம்பி கோரிக்கை
மதுரை: மதுரை விமான நிலையத்தில் இந்தியில்தான் பேச வேண்டும் என கட்டாயப்படுத்த மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை ( CISF) வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
2 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக எம்பி கனிமொழி போட்ட நீங்கள் இந்தியரா என்ற பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்பியிடம் அங்கு பாதுகாப்புக்கு இருந்த CISF வீரர்கள், இந்தி மொழியில் கொரோனா தடுப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினர். இதற்கு கனிமொழி எம்பி பதில் கொடுத்தார்.

அதாவது கொரோனா தடுப்பு அறிவுரைகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கொடுக்கலாமே என கனிமொழி கேள்வி கேட்டார். ஆனால் அங்கிருந்த பெண் காவலர் ஒருவர், கனிமொழியைப் பார்த்து நீங்கள் இந்தியரா? இந்தி தெரியாதா? என கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கொந்தளித்த கனிமொழி எம்பி தமது ட்விட்டர் பக்கத்தில், இந்தி மொழி அறிந்திருப்பதுதான் இந்தியர் ஆக கருதப்படுவது எப்போது முதல் தொடங்கியது என்பதை அறிய விரும்புகிறேன் என பதிவிட்டிருந்தார். அவ்வளவுதான் ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்தது. இந்தி திணிப்புக்கு எதிராக ஆவேசமான குரல்கள் வெளிப்பட்டன. இந்தி பேசாத மாநிலங்களின் முதல்வர்கள் கடும் கண்டனமும் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக CISF தலைமையகம் விசாரணைக்கு உத்தரவிட்டது.
தற்போது இதே போல ஒரு சம்பவம் மதுரை விமான நிலையத்தில் நிகழ்ந்துள்ளது. சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர் நடிகர் சித்தார்த். குறிப்பாக மத்திய பாஜக அரசு, இந்துத்துவா செயல்பாடுகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவர் சித்தார்த். இதனால் சித்தார்த்தை பாஜகவினர் சமூக வலைதளங்களில் கடுமையாக தாக்கி பதிவுகளை வெளியிடுவர்.
நடிகர் சித்தார்த் தமது வயதான பெற்றோருடன் மதுரை விமான நிலையம் சென்றிருக்கிறார். அப்போது அங்கு இருந்த CISF வீரர்கள், இந்தியிலேபே பேசி இருக்கின்றனர். அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள் என நடிகர் சித்தார்த் கேட்டுக் கொண்டார். ஆனாலும் CISF வீரர்கள் இந்தியிலேயே தொடர்ந்து பேசினர். இதனை தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார் நடிகர் சித்தார்த். அதில் வேலை இல்லாதவர்கள் இந்தியில் பேசி அதிகாரத்தை காட்டுகின்றனர் என கொந்தளித்திருந்தார்.

தற்போது நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக குரல்கள் வலுத்து வருகின்றன. மதுரை லோக்சபா தொகுதி எம்பி சு.வெங்கடேசன், நடிகர் சித்தார்த் விவகாரத்தில் CISF வீரர்கள் நடந்து கொண்டது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications