"கொலை.." இந்து மக்கள் கட்சி நிர்வாகியுடன், என் மனைவிக்கு கள்ளக்காதல்! போலீஸ் ஏட்டு பரபர வாக்குமூலம்
மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டது ஏன்?
மதுரை: மதுரையில் ஏட்டு மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தால் கூலிப்படையை ஏவி இந்து மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகி கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவர் சோலையழகுபுரம் பகுதியில் நகைக் கடை நடத்தி வந்தார்.
இவர் இந்து மக்கள் கட்சியில் மதுரை தென்மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று முன் தினம் இரவு தனது கடைக்கு செல்வதற்காக மணிகண்டன் வந்து கொண்டிருந்தார்.

மர்ம கும்பல்
அப்போது அவரை மர்மகும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டது. இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்காக போராடினார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.

போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை குறித்து போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல திடுக் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த சம்பவத்தில் போலீஸ் ஏட்டு ஹரிஹரபாபுவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மணிகண்டனுக்கு கள்ளக்காதல்
கொலை குறித்து அவர் கூறுகையில் தனது மனைவியுடன் மணிகண்டனுக்கு கள்ளக்காதல் இருந்து வந்தது. மேலும் நகைத் தொழிலுக்கு வாங்கிய கடனைத் திருப்பித் தராததாலும் கூலிப்படையை ஏவி அவரை கொன்றேம் என தெரிவித்தார். இதையடுத்து ஹரிஹரபாபு உள்பட கூலிப்படையைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணை
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்தும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அது போல் மணிகண்டன் குடும்பத்தினரிடமும் அவருடைய தொழில் குறித்தும் பழக்கவழக்கங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. இந்து மக்கள் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கூலிப்படையினருக்கு வேறு எந்த கொலையிலாவது தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. நகைத் தொழிலுக்கு எத்தனை ரூபாய் கடனாக வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளபப்டுகிறது.












Click it and Unblock the Notifications