கருணாநிதி கேட்ட ஒற்றை கேள்வி! அதுதான் யோசிக்கவே வைத்தது! ஷிவ் நாடார் சொன்ன பிளாஷ்பேக் - நெகிழ்ச்சி
மதுரை: மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் எச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் பங்கேற்ற நிலையில் ‛‛கருணாநிதி கேட்ட கேள்வி ஒன்று என்னை யோசிக்க வைத்தது'' என முக்கிய விஷயத்தை தெரிவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரையில் பிரமாண்டமான நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரூ.215 கோடி செலவில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டும் பணி தொடங்கி 12 மாதங்களில் விரைவாக முடிவடைந்து.

மதுரையில் புதுநத்தம் சாலையில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் மின்னணு நூலகம் செயல்பட உள்ளது. பார்வையற்றவர்கள் படித்து பயன்பெறும் வகையில் அவர்களுக்கான பிரத்யேக வசதிகளுடன் இந்த நூலகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள், ஆய்வாளர்கள், மாணவர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்றோருக்காக தனித்தனியே அமர்ந்து படிக்கவும் இடங்கள் பிரித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதுவிர குழந்தைகளுக்காக ஒலி மற்றும் ஒளி காட்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
நூலகத்தில் மொத்தம் 3.3 லட்சம் புத்தகம் உள்ளன. இதில் அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், அரசியல், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு, குழந்தை இலக்கியங்கள், அறிவியல், விஞ்ஞானம் என அவை துறைவாரியாக வாங்கி குவிக்கப்பட்டுள்ளன. புத்தகத்துக்காக மட்டும் ரூ.60 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தை நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் எச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனரான தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார், அவரது மகள் ரோஷிணி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது. மேலும் ஷிவ் நாடார் இந்த விழாவில் பங்கேற்றது பற்றி முதல்வர் ஸ்டாலின் விளக்கி கூறினார்.
இதுதொடர்பாக ஸ்டாலின், ‛‛பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொளளாத ஷிவ் நாடாரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளோம். ஆனால் இவரையும், இவரது மகள் ரோஷிணியையும் மாணவ, மாணவியர்களான நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகதான் நான் அழைத்து வந்துள்ளோம்.
இவர் மிகப்பெரிய தொழில் அதிபர் என்று சொல்வது மட்டுமல்ல, அவருடைய பெருமை. இந்திய தொழிலதிபர்களில் அதிகமான தொகைளை நன்கொடையாக வழங்கக் கூடியவர். பணம் வரும்போது அதிகமானவர்களுக்கு உதவி செய்ய அவரது தாயார் கூறியதால் அறக்கட்டளை தொடங்கி கிராமங்களை தத்தெடுத்து உதவி செய்யும் இவர் அரசு பள்ளியில் படித்தவர் தான்'' என புகழாரரம் சூட்டினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஷிவ் நாடார் பேசும்போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை நினைவு கூர்ந்தார். அதோடு கருணாநிதி கேட்ட ஒரு கேள்வியால் தான் தமிழகத்தில் எச்சிஎல் நிறுவனங்களை திறந்ததாக அவர் கூறினார். இதுதொடர்பாக ஷிவ் நாடார் கூறியதாவது:
‛‛நான் கருணாநிதியை 4 முதல் 5 முறை சந்தித்துள்ளேன். இந்த சந்திப்புகளின்போது உரையாடி இருக்கிறேன். அப்போது நீங்கள் டெல்லிக்கு போய் விட்டீர்கள். தமிழ்நாட்டுக்கு எதையும் செய்யவில்லையே என கேள்வி கேட்டார். இதையடுத்து தான் மதுரை, சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோவை என அனைத்து இடத்திலும் தொழில், நிறைய ஆபிஸ் திறந்தோம்'' என கூறினார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications