மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு.. மதுரையில் போராட்டம்.. வைகோவும் பங்கேற்பு

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் போராட்டம் நடந்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி வருகைக்கு எதிர்ப்பு... மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு...

    மதுரை: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் போராட்டம் நடந்து வருகிறது. இதில் மதிமுக சார்பில் வைகோ போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மதுரையில் அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார்.

     Huge protest against PM Modis Tamilnadu visit in Madurai

    இதனால் தமிழகத்தில் பெரிய பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. முக்கியமாக மதுரையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    காலை 11 மணிக்கு மோடி மதுரை வருகிறார். மோடியின் தமிழக வருகைக்காக இப்போதே மதுரையில் போராட்டங்கள் நடந்து வருகிறது. திமுக, மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பெரியாரிய அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட இருக்கிறது.

    அதன்படி தற்போது பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் போராட்டம் நடந்து வருகிறது. மதிமுக, தமிழ்நாடு பெரியார் திராவிட கழகம், பெரியாரிய அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.

    மதிமுக சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போராட்டத்தில் ஈடுபட்டார். மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை வைகோ பறக்கவிட்டார். வைகோ தலைமையில் கருப்புக் கொடி ஏந்தி பலர் போராட்டம் நடத்தினார்கள்.

    தற்போது மதுரை மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் தற்போது மதுரை முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    English summary
    Huge protest is going on against PM Modi's Tamilnadu visit in Madurai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X