யாத்தே.. இவங்கள பாத்தாவே பயமா இருக்கு! கலகல பேச்சுக்கு நடுவே வருத்தப்பட்ட செல்லூர் ராஜூ! யார் அது?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் செல்லூர் ராஜூ மதுரை பேச்சு வழக்கில் பேசி கலகலப்பை கூட்டினார். அதோடு அவர் குறிப்பிட்ட துறையினரை சொல்லி அவர்களை பார்த்தாலே பயமா இருக்கு எனக்கூறி வருத்தத்தையும் பதிவு செய்தார்.

அதிமுக 52வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது.

 I am scared to see the media, Ex-minister Sellur Rajus says in Madurai

இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பேசினார். பொதுவாக செல்லூர் ராஜூ எங்கு பேசினாலும் சில கருத்துகளை வேடிக்கையாக கூறுவார். இது அனைவரையும் ஈர்த்து சிரிப்பை உண்டாக்கும்

அதேபால் நேற்றைய மதுரை பொதுக்கூட்டத்தில் செல்லூர் ராஜூ தனது மதுரை பேச்சு வழக்கில் பேசி கட்சியினரை உற்சாகப்படுத்தினார். கூட்டத்தில் அவர் பேச தொடங்கியதுமே, ‛‛கைத்தட்டுங்கம்மா... கைத்தட்டுங்கப்பா.. இல்லன்னா சங்கடமா இருக்குல்ல'' எனக்கூறி கலகலப்பை கூட்டினார்.

அதன்பிறகு மேடையில் உள்ள தலைவர்களின் பெயர்களை முழுவதுமாக படிக்காத அவர், ‛‛நேரம் ஆகிவிட்டது. அனைத்து நிர்வாகிகளின் பெயரையும் கூற முடியாது. இப்போதே 9 மணி ஆகிவிட்டது. மன்னிச்சுருங்கய்யா'' எனக்கூறினார். இதை கேட்ட மேடையில் இருந்தவர்கள், மேடைக்கு கீழ் இருந்தவர்கள் என அனைவரும் கலகலவென சிரித்தனர்.

அதோடு விடாத செல்லூர் ராஜூ மேடைக்கு முன்னால் அமர்ந்திருந்த ஊடகத்தினரை பார்த்து, ‛‛யாத்தே.. இந்த ஊடக பெருமக்கள பார்த்தா பயமா இருக்குப்பா.. பார்த்தாலே பயமா இருக்கு.. இல்லாத பொல்லாததையும் என்னைப் பத்தி எழுதியிருக்காங்கய்யா.. 41 வருஷம் சொக்கத்தங்கமா இருந்தவன் இந்த செல்லூர் ராஜூ. மதுரைக்காரன் ரோஷக்காரன் ஒரு தவறும் செய்ய மாட்டான்'' என கலகப்போடு கூடிய வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் அவர் பேசுகையில், ‛‛அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா கூட்டணியில் தனது மாநில பிரச்சனைகளை பேசி தீர்வு காண்பது போல் முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் பேசி காவிரியில் தண்ணீரை ஏன் பெற்றுத்தரவில்லை. திமுக போல் கட்சியை வைத்த பிழைப்பு நடத்தும் கட்சி அதிமுக இல்லை. உழைத்த பணத்தை வைத்து கூட்டம் நடத்துபவர்கள் அதிமுக தொண்டர்கள்.

கருணாநிதியாலேயே அதிமுகவை அழிக்க முடியவில்லை, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதியெல்லாம் எம்மாத்திரம். அதிமுகவை நம்பாமல் கெட்டவர்கள்தான் அதிகம். திமுக அனைத்திலும் கரப்ஷன் மற்றும் கலெக்சன் செய்து வருகிறது.திமுக வீட்டிற்கு செல்லும் நாள் தான் தமிழ்நாட்டிற்கு உண்மையான விடியல் கிடைக்கும்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+