பாக்கியமாக உணர்கிறேன்.. மதுரை மீனாட்சி அம்மன் தரிசனம் குறித்து பிரதமர் மோடி தமிழில் பதிவு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கோயிலில் சாமி தரிசனம் செய்தது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டார். அண்ணாமலையின் பாத யாத்திரை இன்று திருப்பூரில் நிறைவு பெற்றது. அண்ணாமலை பாத யாத்திரை நிறைவு விழா திருப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருப்பூரின் பல்லடம் மாதப்பூர் அருகே பிரம்மாண்டமாக நடைபெற்ற நிறைவு விழா கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஜகவினர் திரண்டதாக அக்கட்சியினர் கூறினர். பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி தனது அரசின் சாதனைகள் குறித்து பேசினார். மேலும் திமுகவையும் சரமாரியாக விமர்சித்தார். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோரை புகழ்ந்தும் பேசினார்.

திருப்பூர் கூட்டம் முடிந்த பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு வந்தார். மதுரை வீரபாஞ்சானில் உள்ள டி.வி.எஸ். பள்ளியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான மோட்டார் டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு கார் மூலம் மதுரை பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு காரில் பிரதமர் மோடி சென்றார். அங்கு சிறிதுநேரம் ஓய்வு எடுத்த பிரதமர் மோடி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார். சுமார் 1 மணி நேரம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மனமுருகி சாமி தரிசனம் செய்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். இதனிடையே, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கோயிலில் சாமி தரிசனம் செய்ததை பாக்கியமாக உணர்வதாக பதிவிட்டுள்ளர்.

மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications