திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை காலி செய்வோம்... தங்க தமிழ்ச்செல்வன்
Recommended Video
மதுரை: திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என்று அமமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: 22 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்; ஆட்சியை கலைக்க அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும், இல்லையெனில் திமுக பயந்ததாக அர்த்தம் என்றார்.

3 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்க்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது சரியான தீர்ப்பு என்று வரவேற்பு தெரிவித்தார். உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளதால் சபாநாயகர், கொறடா சட்டப்படி சிக்கி உள்ளனர் என்றும் பேசினார்.
ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியபோது இது போன்ற உத்தரவு வந்திருந்தால் தமிழக அமைச்சர்கள் சிறைக்கு சென்றிருப்பார்கள் என்றும், இனி என்ன செய்தாலும் பழனிசாமி ஆட்சியை தொடர முடியாது என்றும் அவர் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கையான வருகிற 23-ந்தேதிக்கு பிறகு அவர் வீட்டுக்கு புறப்பட வேண்டியது தான். மத்தியில் பா.ஜனதா வெற்றி பெற்றாலும் அ.தி.மு.க.வுக்கு பலவீனமாகவே இருக்கும் என்றும் கூறினார்.
நகைச்சுவை நடிகரைபோல அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செயல்படுகிறார். முதலமைச்சர் பழனிசாமி எப்படி பிரச்சாரம் செய்தாலும், திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி என்றும் ஆரூடம் கூறினார். ஜெயலலிதா மரணத்தின் மர்மம், பொள்ளாச்சி, கொடநாடு விவகாரம் குறித்து அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்ததும் விசாரணை நடத்துவோம் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications